Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் வியத்தகு இந்தியர்கள் 2016 விருதுகளை பிரதமர் வழங்கினார்.

டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் வியத்தகு இந்தியர்கள் 2016 விருதுகளை பிரதமர் வழங்கினார்.


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், “டைம்ஸ் நவ்” தொலைக்காட்சியின் வியத்தகு இந்தியர்கள் 2016 விருதுகளை இன்று வழங்கினார். பல்வேறு நெருக்கடிகளுக்கிடையில் வெற்றிகளை சந்தித்த இந்தியர்களை அங்கீகரிக்கும் வகையில் அந்த விருதுகள் வழங்கப்பட்டன.

அந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், விருது பெற்றவர்கள், ஒரு வைரம் உலகத்தால் அங்கீகரிக்கப்படும் முன் பல்வேறு படிமங்களைக் கடந்து வெற்றி பெறுவதைப் போன்று, வெற்றி பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்தியாவின் பல்வேறு கதைகள், அதிகாரம் மிக்கவர்கள் மற்றும் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களைச் சுற்றியே உள்ளது என்று வருத்தம் தெரிவித்தார் பிரதமர். வாழ்வில் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தவர்கள், நெருக்கடிகளுக்கிடையில் சமுதாயத்துக்காக பணியாற்றியவர்களை சமுதாயம் வெகு அரிகவே அங்கீகரிப்பதாக கூறினார் பிரதமர். பல்வேறு சிறந்த மனிதர்களை, சமூக பொறுப்பு வாய்ந்த நபர்களை உருவாக்கிய ஒரு ஆசிரியர் பெரும்பாலும் யாராலும் அறியப்படாதவராகவே இருப்பார். ஆனால், ஒரு சாதாரண இளைய அரசியல்வாதி அனைவராலும் அறியப்படுகிறார் என்றார் பிரதமர்.

உலகெங்கும் வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலானோர், தனிப்பட்ட நெருக்கடிகளை தாண்டி, பல்வேறு கடினமான சூழல்களை வெற்றி கொண்டு, சமுதாயத்துக்கு தங்கள் பங்கை ஆற்றியவர்களாகவே உள்ளனர் என்றார் பிரதமர். இந்தியாவின் வரலாற்றையும் புராதான கதைகளையும், ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் நினைவுகூர்ந்த பிரதமர், பாஞ் ப்யாரஸ் மற்றும் மராத்தா போர் வீரர்கள், சத்ரபதி சிவாஜியின் ராணுவத்தில் இருந்தனர் என்று கூறினார்.

விருது பெற்றவர்களை அடையாளம் கண்டு உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியதற்காக, டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர், விருது பெற்றவர்களின் பணி, மற்றவர்களுக்கு ஊக்கமாக அமையும் என்றார். விருது பெற்றவர்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.


***