பி.எம்.இந்தியா
இங்கே பெருமளவில் வந்துள்ள வர்த்தக தலைவர்களே, மற்றும், இந்தியா, ஜப்பானைச் சேர்ந்த முதன்மை செயல் அதிகாரிகளே,
முதுநிலை கெய்டன்ரன், ஜெட்ரோ, நிக்கி, சிஐஐ மற்றும் நாஸ்காம் முதுநிலை அலுவலர்களே,
ஜப்பானுக்கு வந்த பிறகு, வர்த்தக சமூகத்தினரிடையே பேசுவது எனக்கு பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. கடந்த பத்தாண்டுகளாக இங்கே தொழில்முனைவோரிடையே நான் விரிவாக விவாதம் நடத்திவருவதை இன்றும் நினைவில் வைத்துள்ளேன். உங்களது தொலைநோக்கை நான் அறிந்து கொண்டேன். மேலும், பல புதிய விஷயங்களையும் உங்களிடமிருந்து தெரிந்து கொண்டேன். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவுடனான உங்களது நெருக்கம், சீராக வளர்ந்து வருகிறது.
வர்த்தகத்தை இலகுவாக தொடங்குவதற்கும், வாழ்க்கைமுறையை இலகுவாக்குவதற்கும் நாம் உணரத்தக்க வகையில், நாட்டில் வர்த்தகச் சூழலை ஒவ்வொரு கட்டத்திலும் மாற்றுவதற்கான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
நண்பர்களே சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் குட்டி ஜப்பான் குறித்து நான் பேசினேன். இப்போது இந்தியாவில் அதற்கான பணியில் அதிகமாக நீங்கள் பணியாற்றுவது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் 1150 ஜப்பான் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. எனினும், 2014-லிருந்து 2017- வரை 200க்கும் மேற்பட்ட புதிய ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கத் தொடங்கி உள்ளன. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக நீங்கள் அனைவரும் பாராட்டுதலுக்கு உரியவர்கள்.
இன்று இந்தியாவில் ஜப்பான் நிறுவனங்கள், கார் உற்பத்தியிலிருந்து தகவல் தொடர்பு வரை மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளிலிருந்து சேவைத்துறை வரை ஆகியவற்றில் பணியாற்றி வருகின்றன. இந்திய, ஜப்பானுக்கு இடையிலான இந்த இனிய பயணம் மேலும் மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக, முடிவு சார்ந்து இயங்குவதாக ஆகியுள்ளது. இதற்கும் உங்களுக்கு பாராட்டுகள்!
நண்பர்களே,
இந்தியா மற்றும் ஜப்பான் ஒன்றுக்கொன்று நம்பிக்கை மற்றும் பாரம்பரிய பகிர்வு அடிப்படையில் பின்னிப் பிணைந்துள்ளன. இந்த இரு நாடுகளுக்கு இடையேயான இந்த நெருங்கிய உறவின் அடித்தளம் அதன் உணர்வு மற்றும் சடங்கைப் பொருத்ததாகும்.
2014-ல் நான் பிரதமராக முதலில் பயணம் மேற்கொண்டதற்கு இதுதான் காரணம். இருநாடுகளும் சேர்ந்து இந்த உறவை புதிய உச்சத்திற்கு, சிறப்புத்திடம் மற்றும் உலக கூட்டாளித்துவம் அடிப்படையில் கொண்டு செல்ல நாங்கள் முடிவு செய்துள்ளோம். அன்று முதல் மாண்புகு ஜப்பான் பிரதமர் அபேயும், நானும் சந்தித்து வருகிறோம். இருநாடுகளுக்கிடையேயான வர்த்தகத் தடைகளை நாங்கள் இருவரும் கடந்து வந்திருக்கிறோம்.
நண்பர்களே,
கடந்த சில ஆண்டுகளில் ஜப்பான் அரசு, நமது பல உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு உதவி செய்துள்ளது. நமது மேற்கு சரக்கு முனைய கட்டுமானப்பணி முடிவடையும் தருவாயில் இருக்கிறது. ஓராண்டுக்குப் பிறகு இது, முழுமையாக செயல்படத் தொடங்கும். அத்துடன் தில்லி-மும்பை, தொழில்முனையம் அதோடு இணைக்கப்படும். ஜப்பான் அரசு மற்றும் ஜப்பான் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டம் சிறப்பாக நடந்தேறி வருகிறது.
கடைசியாக மாண்புமிகு அபே இந்தியா வந்தபோது, அதிவிரைவு ரயில் திட்டத்தில் இணைந்து பணியாற்ற நாங்கள் தீர்மானித்தோம். இந்தியாவின் முதலாவது அதி விரைவு ரயில் திட்டம் மும்பை-அகமதாபாத் இடையே தொடங்கியிருக்கிறது. இந்தத் திட்டத்திற்கான பணிகள் பெரிய அளவில் நடைபெற்று வருகின்றன.
நண்பர்களே,
இந்தியாவில் எனது தலைமையிலான அரசு அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகள் ஆகின்றன. இந்தக் காலகட்டத்தில், வர்த்தகம் தொடர்பான பிரச்சினை எனது பட்டியலில் முன்னுரிமை பெற்றிருந்தது. அதாவது வர்த்தகம் தொடங்குவதை எளிதாக்குவது. இதன் பலன் உலகத்தின் கண்முன்னே தற்போது தெரிகிறது. 2014-ல் நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு உலக வங்கியின் வர்த்தக தரவரிசையில் இந்தியா 142-ஆவது இடத்தில் இருந்தது. இப்போது நாம் 100-ஆவது இடத்தில் இருக்கிறோம். மேலும், இந்த தரவரிசையில் முன்னேறுவதற்கு நாம் விரிவாக பணியாற்றி வருகிறோம். மத்திய, மாநில அரசுகளின் ஒவ்வொரு கட்டத்திலும் இதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறோம். வரும் ஆண்டுகளில் இது சிறந்த பலன்களை உருவாக்கும்.
இதுபோன்ற பெரிய முன்னேற்றம் விரைவான, தீர்க்கமான மற்றும் பழங்காலச் சட்டங்களை மாற்றியதாலேயே முடிந்தது.
இங்கே நான் முக்கியமான மற்றொன்றை சொல்ல விரும்புகிறேன். வர்த்தகம் தொடங்குவதை மேலும் எளிதாக்கி மேம்படுத்துவதற்காக
36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை தரவரிசை பட்டியலில் கொண்டு வரும் முயற்சியை மத்திய அரசு தொடங்கியிருக்கிறது.
இதன்மூலம் பெரிய அளவில் பலன் கிடைக்கும். ஏனென்றால் தற்போது மாநிலங்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டி உள்ளது. இந்தப் போட்டி மிகவும் மகிழ்ச்சியான பலன்களைத்தர தொடங்கியுள்ளது.
நண்பர்களே,
மூலதன முதலீடுதான் நமது நாட்டின் தேவையாகும். வர்த்தகம் தொடங்குவதை எளிமையாக்குவதற்கான நேர்மையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கும் இதுதான் காரணம் ஆகும். மூலதன முதலீடு உருவாக்கப்பட்டதும் வேலையில்லாதோருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இதன்மூலம் நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் வேளாண், கனிமம், கடல் வளங்கள் மற்றும் அனைத்து இயற்கை வளங்களிலும் முன்னேற்றம் ஏற்படும்.
வர்த்தகம் தொடங்குவதை எளிதாக்குவதன் விரிவாக்கம்தான் நம் நாட்டின் குடிமக்களுக்கு வாழ்க்கை முறையை எளிதாக்கும் நமது முயற்சிகளாகும்.
எனவேதான், பெரிய அளவிலான பிரச்சாரத்தின் மூலம், வர்த்தகத்தைத் தொடங்குவதை எளிதாக்கும் திட்டத்தில் நாம் பணியாற்றி வருகிறோம். இந்த முயற்சிகளின் காரணமாக நாம் ஏராளமானவற்றைப் பெற்றுள்ளோம்.
உள்நாட்டு கட்டமைப்பை பொறுத்தமட்டில் நாம் மேற்கொள்ள உறுதிபூண்ட சீர்திருத்தங்கள் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் வருமாறு:
நண்பர்களே,
பிரதமர் என்ற முறையில் எனது முதலாவது ஜப்பான் பயணத்தின் போது ஜப்பான் பிளஸ் என்ற அமைப்பு ஒன்றை உருவாக்குவது பற்றி நான் பேசியிருந்தேன். ஜப்பான் வெளிவர்த்தக அமைப்பான ஜெட்ரோவும், நீங்களும் அந்த முறையைப் பயன்படுத்துவது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிகழ்ச்சியில் இன்னொரு தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்தியாவில் முதலீடு என்பதுடன், ஜப்பான் பிளஸ் செயல்படுகிறது. சில நாட்களுக்கு முன்னால், முதலீடு இந்தியா என்பதன் மிகச்சிறந்த பணிக்காக ஐநா சபை உலக அளவிலான கவுரவத்தை வழங்கியிருக்கிறது.
நண்பர்களே,
இந்தியாவின் பொருளாதாரம் விரைவாக வளர்ந்து வருகிறது, அதன் நடுத்தர வர்க்கம் விரைவாக முன்னேறி வருகிறது. அதன் நகர்ப்புற மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. இங்குள்ள ஜப்பான் நிறுவனங்களில் இந்திய இளைஞர்களுக்கு மிக விரிவான வேலைவாய்ப்பு கிடைக்கிறது. ஒரு சில உதாரணங்களை உங்களுக்கு நான் அளிக்கிறேன்.
கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் உற்பத்தி போன்ற சிறப்பு திட்டங்களின் கீழ், உற்பத்தி மற்றும் ஆராய்ச்சித் துறையில் உலகின் குவி மையமாக இந்தியாவை மாற்றுவதில் நாங்கள் முன்னேற்றம் கண்டிருக்கிறோம்.
இந்தியாவில் செயல்படுவதற்கு ஜப்பானில் ஏராளமான தொழில் திறன்கள் குறிப்பாக எம்.எஸ்.எம்.ஈ. நிறுவனங்கள் உள்ளன. ஜப்பானின் ஒவ்வொரு பெரிய தொழில் நிறுவனமும் இந்தியாவுக்கு வருவதை வரவேற்கிறோம். ஆனால், எம்.எஸ்.எம்.ஈ. மூலமும் ஜப்பானின் தொழில் அதிபர்கள் தங்களின் வர்த்தகத்தை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்ல முடியும். மிகக் குறைந்த காலத்திலேயே எம்.எஸ்.எம்.ஈ.-க்களின் பலன்களைக் கண்கூடாகக் காண முடியும்.
இந்தியாவில் வணிகம் செய்வதால் ஏற்படும் பயன்களில் ஒன்று குறைந்த செலவில் உற்பத்தி என்பதாகும். இதைத் தவிர, இந்தியாவில் ஏராளமான தொழிலாளர்கள் இருப்பதால், தொழிலாளர்களுக்கான செலவு போட்டிமுறையில் இருக்கும்.
அதேபோல், எங்களின் ஐ.டி. தொழில் துறையும் மிகப்பெரிய சக்தியாகும். எங்களின் மென்பொருள் உங்களின் வன்பொருளோடு இணையும் போது உலகத்தில் நாம் அதிசயங்களை உருவாக்க முடியும் என்று ஏற்கனவே இங்கு வந்த போது நான் கூறியிருக்கிறேன்.
இதுமட்டுமல்ல, செயற்கை நுண்ணறிவு, பொருள்களுக்கான இணையதளம், முப்பரிமாண அச்சு, ரோபோ செயல்பாடுகள் போன்ற தொழில்நுட்பத் துறையின் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் நான்காவது தொழில்நுட்ப புரட்சியை நோக்கி இந்தியா விரைந்து முன்னேறி வருகிறது.
அதேபோல், மின்சாரப் பயன்பாட்டுப் போக்குவரத்தில் இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையேயான ஒத்துழைப்பு என்பது இருநாடுகளுக்கும் மிக அதிக லாபத்தைத் தரும் என்பது நிரூபிக்கப்பட உள்ளது.
நண்பர்களே,
இவற்றுக்கும் அப்பால், அடிப்படைக் கட்டமைப்பிலும் கூட, இந்தியாவில் நாங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பணியாற்றி வருகிறோம். அடுத்த தலைமுறை கட்டமைப்பு வசதி என்பது இப்போது எங்களின் முன்னுரிமையாக இருக்கிறது. திறன், வேகம், அளவு என்பவற்றை அடித்தளங்களாகக் கொண்டு, போட்டிப் பொருளாதாரத்தை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம். இந்த எண்ணத்தை ஈடேற்ற முதலீட்டுச் சூழலை மேம்படுத்துவதற்கு நாங்கள் தொடர்ச்சியாக முயற்சி செய்து வருகிறோம்.
இந்தியாவில் விரிவான வர்த்தக வாய்ப்புகளை உருவாக்குவதற்கு இந்த அமைப்பிலிருந்து இன்று நான் உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். கூடுதலான வாய்ப்பு குறித்து மேலும் சில உதாரணங்களை உங்களுக்கு நான் தர விரும்புகிறேன்:
நண்பர்களே,
ஜனநாயக மாண்புகள் மற்றும் சுதந்திரத்திற்கு இந்தியாவும், ஜப்பானும் வலுவான ஆதரவாளர்களாக உள்ளன.
மேம்பாட்டுக்கான கொள்கைகள் பற்றிய நமது பார்வையிலும் அணுகுமுறையிலும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. திறன் வளர்ப்பு மற்றும் அடிப்படை கட்டமைப்புக்கும் அப்பால், மூன்றாவது நாடுகளில் சுகாதாரம் மற்றும் வேளாண் துறைகளில் ஒத்துழைக்க ஜப்பானுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான ஒத்துழைப்பு வலுவாக உள்ளது.
எனவே, இந்தியா-பசிபிக் அல்லது தெற்காசியா அல்லது ஆப்பிரிக்கா எதுவாக இருந்தாலும், நமது கூட்டாளி நாடுகளின் முன்னுரிமைகள் அடிப்படையில், மூன்றாம் நாடுகளின் வளர்ச்சியில் இந்தியாவும், ஜப்பானும் பங்களிப்பு செய்வதை வலுப்படுத்த முடியும்.
சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணிக்குள் ஜப்பான் வந்திருப்பதுடன், மூன்றாம் நாடுகளின் சூரிய மின்சக்தி மற்றும் பருவநிலை மாற்றம் என்ற தலைப்புகள் குறித்து இருநாடுகளுக்கும் இடையே புதிய பங்களிப்புக்கான கதவுகள் திறந்துள்ளன.
இந்தத் துறைகளில் ஆப்பிரிக்காவில் இந்தியா-ஜப்பான் வணிகர்களிடையே விரிவான ஒத்துழைப்புக்கு இன்று நடைபெற்ற இந்தியா-ஜப்பான் வணிகத் தலைவர்கள் அமைப்பின் கூட்டத்தில் பல உறுப்பினர்கள் ஏராளமான நல்ல யோசனைகளை தெரிவித்திருப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.
நண்பர்களே,
வலுவான இந்தியா, வலுவான ஜப்பான் என்பது பற்றி நான் எப்போதும் பேசி வருகிறேன்.
இந்தத் தருணத்தில் ஜப்பானின் தொழில் துறையினர் இந்தியாவின் மீது சிறப்பு நம்பிக்கை கொண்டிருப்பதற்காக நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவில் முதலீட்டுக்கான இடத்தை அதிகரிக்க உங்கள் அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்க விரும்புகிறேன்.
இந்தியா-ஜப்பான் இடையேயான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்த சாத்தியமான அனைத்து வழிகளிலும் உங்களுக்கு உதவி செய்ய நான் உறுதியளிக்கிறேன்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் மீண்டும் நான் மிகுந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி.
*******
भारत सरकार ने Ease of Doing business को और बढ़ावा देने के लिए अपने 36 राज्यों और Union Territories की Ranking भी करनी शुरू कर दी है।
— PMO India (@PMOIndia) October 29, 2018
इसका एक बड़ा प्रभाव ये हुआ है कि अब राज्यों में भी Investment को लेकर Healthy Competition शुरू हो गया है जिसके बहुत बेहतर परिणाम दिखने लगे हैं: PM
प्रधानमंत्री के तौर पर अपनी पहली यात्रा के दौरान ही मैंने Japan plus नाम की एक संस्था खड़ी करने की बात की थी।
— PMO India (@PMOIndia) October 29, 2018
Japan plus हमारी Invest India के साथ मिलकर काम करती है।
इस @investindia को अपने बेहतरीन कार्यों के लिए युनाइटेड नेशंस ने वैश्विक सम्मान से पुरस्कृत किया है: PM
भारत में व्यापार करने का एक फायदा Low cost manufacturing भी है। उसके पीछे भारत में Competitive Labour Cost एक बहुत बड़ी ताकत है।
— PMO India (@PMOIndia) October 29, 2018
उसी तरह से हमारी IT industry एक बहुत बड़ी शक्ति है। मैंने पहले भी यहां आकर कहा है, हमारा Software और आपका Hardware मिल जाए, तो कमाल हो सकता है: PM
भारत technology के क्षेत्र में होने वाले नए आविष्कारों जैसे AI, IoT, 3D Printing, Robotics आदि के जरिए Industry 4.0 की तरफ तेजी से आगे बढ़ रहा है।
— PMO India (@PMOIndia) October 29, 2018
Electric Mobility एक ऐसा क्षेत्र है जिसमें भारत और जापान के बीच का सहयोग दोनों देशों के लिए बेहद लाभदायक साबित होने जा रहा है: PM
मैं हमेशा ही Strong India – Strong Japan की बात करता रहा हूं।
— PMO India (@PMOIndia) October 29, 2018
मैं आज इस अवसर पर जापान के उद्यमी वर्ग का भारत पर विशेष विश्वास करने के लिए आभार व्यक्त करता हूं।
मैं आप सभी को भारत में निवेश की गति बढ़ाने के लिए भी आमंत्रित करना चाहूंगा: PM