பி.எம்.இந்தியா
தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனமான காவி நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் டாக்டர் காவி அவர்கள், பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை இன்று சந்தித்து, தடுப்பு மருந்து தயாரிப்பில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் இந்தியாவில் குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து தயாரிப்பது குறித்து பேசினார்.
இந்தியாவின் திட்டங்களான “மிஷன் இந்திரதனுஷ்” மற்றும் “மேக் இன் இந்தியா” ஆகிய திட்டங்கள், குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து தயாரிப்பை ஊக்கப்படுத்துவது குறித்து, டாக்டர் பெர்க்லி பாராட்டு தெரிவித்தார்.
அந்த விவாதத்தின்போது, காவி நிறுவனம், இந்தியாவோடு 2016-2021 ஆண்டில் கூட்டு சேர்ந்து தடுப்பு மருந்து தயாரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பு மருந்து தயாரிப்பில் நவீன முறைகளை அமல்படுத்துவது குறித்து காவி நிறுவனம் 500 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தியா அறிமுகப்படுத்த உள்ள, பல குழந்தைகளை பாதிக்கும் வயிற்றுப் போக்குக்கு எதிரான தடுப்பு மருந்து, தட்டம்மை நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து மற்றும் கழுத்து புற்று நோய்க்கான தடுப்பு மருந்து ஆகியவை இதில் அடங்கும்.
இந்தியா மட்டுமல்லாமல் இதர நாடுகளிலும் பயன்படுத்தக் கூடிய சுற்றுச் சூழலுக்கு ஏற்ற சூரிய ஒளி எரிசக்தி, போன்றவை குறித்தும், தடுப்பு மருந்துகளின் தர முன்னேற்றம் குறித்தும், மலிவான விலையில் அனைவருக்கும் மருந்து கிடைப்பது குறித்தும் பிரதமரும் டாக்டர் பெர்க்லியும் விவாதித்தனர்.
Dr. Seth Berkley, CEO of Gavi, the Vaccine Alliance met PM @narendramodi. https://t.co/rUuHb4dKyH @GaviSeth pic.twitter.com/Gydt49kbLf
— PMO India (@PMOIndia) January 6, 2016