Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தற்போதைய நிலை மற்றும் முன்னேற்றம் குறித்த அறிக்கைக்கு அனுமதியளித்ததோடு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இணங்கிய வகையில் “நதிகளை ஒன்றோடொன்று இணைப்பதற்கான சிறப்புக் குழு” வை உருவாக்கவும் மத்திய அமைச்சரவை அனுமதியளித்தது


பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, கடந்த 27.02.2002 அன்று 2002ஆம் ஆண்டின் 512 எண்ணுடைய ரிட் மனுவோடு இணைந்த வகையில் 2002ஆம் ஆண்டின் ரிட் மனு எண். 668ன் மீது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பிற்கு இணங்க செயல்படுவதற்கென “நதிகளை ஒன்றோடொன்று இணைப்பதற்கான சிறப்புக்குழு”வை உருவாக்கவும், இதுகுறித்த தற்போதைய நிலை, முன்னேற்றம் ஆகியவை குறித்த அறிக்கைக்கும் தனது ஒப்புதலை வழங்கியது.

மத்திய அமைச்சரவின் இந்த அனுமதி இந்திய அரசின் 1980ஆம் ஆண்டிற்கான தேசிய கருத்தோட்ட திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள நதிகளை ஒன்றோடொன்று இணைப்பதற்கான மதிப்புமிக்க திட்டங்களை கண்காணிக்க உதவும் நதிகளை ஒன்றோடொன்று இணைப்பதற்கான சிறப்புக் குழுவின் தற்போதைய நிலை, முன்னேற்றம் ஆகியவை குறித்த அறிக்கையானது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தகவலுக்காக அமைச்சரவையின் முன் வைக்கப்படும். இதன் மூலம் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு எவ்வளவு துரிதமாக முடியுமோ அந்த அளவிற்கு, பொருத்தமான முடிவுகளை, அமைச்சரவை விரைவாக எடுக்கவும் அது உதவும்.