Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திருப்பதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான இந்திய நிறுவனத்தை செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்


ஆந்திரப் பிரதேசம் மாநிலம் திருப்பதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை 2015-16 ம் கல்வி ஆண்டு முதல் தற்காலிக வளாகத்தில் முதல் மூன்று ஆண்டுகளுக்கு (2015-18) ரூ. 137.30 கோடி மதிப்பீட்டில் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பின்னணி

ஆந்திரப் பிரதேச மறு சீரமைப்புச் சட்டம் 2014- ன் படி ஆந்திரப் பிரதேச மாநிலத்தை ஆந்திரப் பிரதேசம் மற்றம் தெலுங்கானா என பிரிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக மத்திய அரசு அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி இந்திய நிறுவனம் என்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனத்தை எஞ்சியுள்ள ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அமைக்க முடிவு செய்தது. இதன் பலனாக ஆந்திரப் பிரதேச அரசு எற்பேடு மண்டலத்தில் சீனிவாசபுரம், பாங்கூர், சிந்தேபள்ளி கிராமங்களில் 244 ஏக்கர் நிலத்தை திருப்பதி அறிவியல் கல்வி ஆராய்ச்சி இந்திய நிறுவன நிரந்தர வளாகம் அமைக்க வழங்கியது. இடம் தெரிவ செய்யும் குழுவின் பரிந்துரை அடிப்படையில் இந்த நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த நிரந்தர வளாகம் அமையும் வரை திருப்பதி ஸ்ரீராமா பொறியியல் கல்லூரியில் தற்காலிக வளாகத்தில் 2015-16 ம் கல்வி ஆண்டிலிருந்து இந்த நிறுவனத்தை செயல்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

***