Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திருமதி. டோரிஸ் பிரான்சிஸ் சிகிச்சைக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ. 3 லட்சம் – பிரதமர் ஒப்புதல்


திருமதி. டோரிஸ் பிரான்சிஸ் அவர்களின் சிகிச்சைக்கான பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ. 3 லட்சம் அளிக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். திருமதி. டோரிஸ் பிரான்சிஸ் ஆற்றிய சேவைகள் குறித்தும் அவர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட செய்தியையும் பிரதமர் அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அவருக்கு உதவ பிரதமர் முன்வந்தார்.

திருமதி. டோரிஸ் பிரான்சிஸ் புது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு தேவையான சிகிச்சைகளை சிறந்த முறையில் அளிக்குமாறு மருத்துவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவருக்கு அளிக்கப்பட்ட இந்த நிதி உதவி குறித்து மருத்துவமனைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டது.

காசியாபாத்தில் வசித்து வரும் திருமதி. டோரிஸ் பிரான்சிஸ், தன்னார்வத்தோடு மிகவும் பரபரப்பான தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீர்செய்யும் பணியில் தன்னார்வ தொண்டாற்றுவதில் பிரபலமானவர்.