பி.எம்.இந்தியா
திரு ஆர். நல்லகண்ணுவின் மறைவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். அடிமட்ட அளவில் அவர் கொண்டிருந்த தொடர்பு மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் குரல் கொடுப்பதற்கு அவர் மேற்கொண்ட அயராத முயற்சிகளைப் பிரதமர் எடுத்துரைத்துள்ளார்.
சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களாலும் திரு ஆர். நல்லகண்ணு பரவலாக மதிக்கப்பட்டார் என்றும் அவரது எளிமையும் குறிப்பிடத்தக்கது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தத் துயரமான தருணத்தில், அன்னாரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் தனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“திரு நல்லகண்ணு அவர்கள் அடித்தட்டு மக்களுடனான தொடர்புக்காகவும், உரிமை மறுக்கப்பட்டோர், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்காகக் குரல் கொடுக்கும் முயற்சிகளுக்காகவும் நினைவுகூரப்படுவார். சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களாலும் அவர் பெரிதும் மதிக்கப்பட்டார். அவரது எளிமையும் அதே அளவுக்குக் குறிப்பிடத்தக்கது. எனது எண்ணங்கள் யாவும் அவரது குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களுடன் உள்ளன.”
(Release ID: 2232868)
****
TV/BR/SH
Thiru R. Nallakannu will be remembered for his grassroots connect and efforts to give voice to the underprivileged, workers and farmers. He was widely respected by people from every section of society. Equally noteworthy was his simplicity. My thoughts are with his family and…
— Narendra Modi (@narendramodi) February 25, 2026
திரு நல்லகண்ணு அவர்கள் அடித்தட்டு மக்களுடனான தொடர்புக்காகவும், உரிமை மறுக்கப்பட்டோர், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்காகக் குரல் கொடுக்கும் முயற்சிகளுக்காகவும் நினைவுகூரப்படுவார். சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களாலும் அவர் பெரிதும் மதிக்கப்பட்டார். அவரது எளிமையும் அதே…
— Narendra Modi (@narendramodi) February 25, 2026