Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரு ஏ பாலகிருஷ்ணனின் மறைவிற்குப் பிரதமர் இரங்கல்


விவேகானந்த கேந்திர அமைப்பின் அகில இந்தியத் தலைவராகப் பணியாற்றிய திரு ஏ பாலகிருஷ்ணனின் மறைவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளுக்காகவும், தேச சேவைக்காகவும் தனது வாழ்நாளின் சுமார் 50 ஆண்டுகளை அவர் அர்ப்பணித்ததைச்  சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, சமூகத்திற்கு அவர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பை நினைவு கூர்ந்தார். “அவருக்கு வடகிழக்கு பிராந்தியத்துடன் மிக நெருங்கிய தொடர்பு இருந்தது. கல்வி, சமூகம், நாட்டை கட்டமைக்கும் பணிகளில் அவர் முக்கிய பங்காற்றினார்என்று பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:

விவேகானந்த கேந்திர அமைப்பின் அகில இந்தியத் தலைவராகப் பணியாற்றிய திரு ஏ பாலகிருஷ்ணனின் மறைவு குறித்து அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

திரு பாலகிருஷ்ணன், தனது வாழ்நாளில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான காலத்தை சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளுக்கும், சமூக சேவைக்கும் அர்ப்பணித்தார். விவேகானந்த கேந்திர அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவராக, அவர் நாடு முழுவதும் அயராது பணியாற்றினார். வடகிழக்கு பிராந்தியத்துடன் அவருக்கு மிக நெருக்கமான தொடர்பு இருந்தது. கல்வி, சமூகம்,  நாட்டைக் கட்டமைக்கும் பணிகளில் அவர் முக்கிய பங்காற்றினார்.

விவேகானந்த கேந்திரக் குடும்பத்தினருக்கும், அன்னாரது ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2303642&reg=3&lang=1

***

SS/RB/RJ