Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரு சோ. ராமசாவாமி மறைவிற்கு பிரதமர் இரங்கல்


திரு சோ. ராமசாவாமி மறைவை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“திரு சோ. ராமசாமி பன்முகத்தன்மை கொண்டவர், சிறந்த அறிவாளி, தேசியவாதி மற்றும் எதற்கும் அஞ்சாதவர். இவர் மிகவும் மதிக்கப்பட்டு நேசிக்கப்பட்ட மனிதர் ஆவார்.

இவை அனைத்துக்கும் மேல் அவர் எனது சிறந்த நண்பராக விளங்கினார். அவரது பத்திரிகையின் ஆண்டுவிழா நிகழச்சியில் கலந்து கொண்டபோது வேறு எங்கும் இல்லாத வாசகர் கலந்துரையாடலாக அமைந்தது.

சிறந்த அறிஞரும், வெளிப்படையாக பேசக்கூடியவருமான திரு சோ. ராமசாமி அச்சமின்றி பேசக் கூடியவர். அவர் மறைவு வேதனை அளிக்கிறது. அவரின் குடும்பத்தினருக்கும், எண்ணற்ற துக்ளக் வாசகர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பிரதமர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

***