பி.எம்.இந்தியா
தில்லியில் உள்ள அதிகாரப்பூர்வமற்ற குடியிருப்புகளில் வாழ்வோருக்கு உடமையாக்குதல் அல்லது அடமானம் வைக்கும் உரிமை வழங்குதல் பற்றி பரிந்துரை செய்ய குழு ஒன்றை அமைப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தில்லிப் பிரதேச துணை நிலை ஆளுநர் இந்தக் குழுவின் தலைவராக இருப்பார்.
இந்தக் குழு 90 நாட்களில் தனது அறிக்கையை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்திற்கு அளிக்கும். இதன் பிறகு மத்திய அமைச்சரவை செயலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்த பின், மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.
*****