பி.எம்.இந்தியா
தலைநகர் புதுதில்லியில் அதிகரித்துவரும் குற்றங்களின் எண்ணிக்கை குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி கவலை தெரித்துள்ளார். இது குறித்து தில்லி காவல் ஆணையர் திரு. பி. எஸ். பாஸியிடம் பிரதமர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். சமீபத்தில் நடைப்பெற்ற குற்றங்களை விரைவாக விசாரித்து, குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.
இது குறித்து மத்திய உள்துறை செயலர் திரு. எல்.சி கோயலுடன் தொலைபேசி மூலம் பிரதமர் தொடர்பு கொண்டார். அதிகரித்துவரும் குற்ற எண்ணிக்கைகள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தலைநகரில் உள்ள பெண்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.