பி.எம்.இந்தியா
தில்லி அலிப்பூரில், சிறு விவசாயிகள் விவசாய, வர்த்தக கூட்டமைப்பு விவசாய விற்பனை நிலையம் அமைப்பதற்கு தில்லி பால் திட்டத்திற்கு சொந்தமான 91/15 எண் உள்ள 1.61 ஏக்கர் நிலத்தை குத்தகை விடுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
10.9.2014 முதல் 9.9.2044 வரையிலான 30 ஆண்டு காலத்திற்கான இந்த குத்தகைக்கு மாதம் ஒன்றுக்கு 100 ரூபாய் குத்தகை வாடகையாகவும் 10.9.2014 முதல் இது வருடம் ஒன்றுக்கு 10 சதவீதமாக உயர்த்தப்படும். ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 31ஆம் தேதிக்குள் வருடம் முழுவதுக்குமான குத்தகை வாடகையை முன்னதாகவே செலுத்த வேண்டியிருக்கும்.
தாக்கம்:
சிறு விவசாயிகள், விவசாய வர்த்தகக் கூட்டமைப்பால் அமைக்கப்படும் இந்த விவசாய விற்பனைக் கூடம் தில்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டலத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் நாடெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் சந்தை வழித்தடங்கள் மற்றும் பழங்கள் மற்றும் காய்கறிகளை மொத்தமாகவும், சில்லறையாகவும் நேரடியாக உற்பத்தி செய்ய உற்பத்தியாளர் சங்கங்களுக்கும் ஒரு வாய்ப்பினை வழங்கும்.
விவசாய விற்பனைக் கூடத்தின் சிறப்பியல்புகள் :