Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திவாலாதல் மற்றும் நொடிப்பு நிலை விதிகள் (திருத்த) அவசரச் சட்டம் 2017-க்கு மாற்றான திவாலாதல் மற்றும் நொடிப்பு நிலை விதிகள் (திருத்த) மசோதா 2017-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், திவாலாதல் மற்றும் நொடிப்பு நிலை விதிகள் (சட்டத் திருத்த) மசோதா 2017-க்கு மாற்றான, மாற்று மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு செயல்பாட்டுக்குப் பிந்தைய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மசோதாவை, திவாலாதல் மற்றும் நொடிப்பு நிலை (திருத்த) சட்டம், 2018-யாக நாடாளுமன்றம் நிறைவேற்றியது.

இந்தத் திருத்தம் மூலம், நொடிப்பு நிலையை அடைந்ததாக வேண்டுமென்றே கூறாத தொழில் நிறுவன உரிமையாளரை தீர்வு நடவடிக்கையில் சேர்ப்பதற்கு தடைவிதிக்கப்படுகிறது மற்றும் தெளிவுபடுத்தப்படுகிறது. செலுத்த முடியாத கடன் என்பதை அதிக நம்பகத்தன்மையுடன் உறுதிப்படுத்தும் நபருக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.