Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

துபாய் ஆட்சியாளர் மகன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி கடிதம்


அமீரக துணை அதிபரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூமின் மகன் மாண்புமிகு. ஷேக் ராஷித் பின் முகமது அல்-மக்தூம் அவர்கள் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமீரக துணை அதிபரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூமிற்கு திரு. மோடி கடிதம் எழுதியுள்ளார்.

“உங்களது அருமை மகன் மாண்புமிகு ஷேக் ராஷித் பின் முகமது அல்-மக்தூம் அகால மறைவு செய்தி எனக்கு ஆழ்ந்த சோகத்தை அளிக்கிறது.

அவரது மறைவினால், அவரது பொது வாழ்க்கை குறுகிய காலத்திலேயே முடிவடைந்துவிட்டது. இந்த துயரமான தருணத்தில் எங்களது பிரார்த்தனைகள் உங்களுடனும், உங்கள் குடும்பத்தினருடனும் ஐக்கிய அரபு அமீரக மக்களுடனும் இருக்கும். ஈடுகட்ட முடியாத இழப்பில் இருந்து ஐக்கிய அரபு அமீரக சகோதர சகோதரிகள் மீள்வதற்கு இந்திய மக்கள் என்றும் துணை இருப்பார்கள்”, என்று பிரதமர் மோடி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

•••••