பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை இந்தியா மற்றும் ஸ்பெயின் இடையே துறைமுகங்கள் தொடர்பான விவகாரங்கள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்தது.
இரு நாடுகளும், துறைமுகம் தொடர்பான விவகாரங்கள் மற்றும் கடல் சார் விவகாரங்களில் கூட்டுறவையும், ஒத்துழைப்பையும் ஏற்படுத்தினால், இரு நாடுகளுக்கும் அது பெரிதும் பயனுள்ளதாக இருக்கும், இரு நாடுகளும் பரஸ்பரம் உதவிக் கொள்ளலாம், ஆலோசனைகளை பரிமாறிக் கொள்ளலாம் என்ற வகையில், இரு நாடுகளிடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.
கையெழுத்தாக உள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இரு நாடுகளும், பரஸ்பரம் துறைமுகங்களை வளர்ப்பதற்கு உதவிக் கொள்வதற்கும், கடல் போக்குவரத்தை அதிகரிக்க வழிவகைகள் செய்வதற்கும், கடற் பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு கடல் தொடர்பான பயிற்சிகள் அளிப்பதற்கும், கடலில் வணிகம் பெருக தகவல் பரிமாறிக் கொள்வதற்கும், துறைமுக வளர்ச்சி தொடர்பாக கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும், துறைமுகங்களை மேம்படுத்துவதற்கும், தற்போது உள்ள துறைமுகங்களை நவீனப்படுத்துவதற்கும், தூர் வாருவதற்கும், ஆற்றுப் படுகையோடு அமைந்த துறைமுகங்களில் தூர் வாருவதற்கும், சுற்றுச் சூழலுக்கு ஏற்ற பசுமை துறைமுகங்கள் அமைப்பதற்கும், துறைமுக பொறியியல் தொடர்பாகவும், கடல் சார் பயிற்சி, கடல் சார்ந்த தகவல் தொழில்நுட்பம், மற்றும் இதர துறைமுகம் மற்றும் கடல் சார்ந்த நடவடிக்கைகளுக்கும் இது உதவிகரமாக இருக்கும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இரு தரப்புக்கும் ஏற்ற ஒரு நாளிலும் இடத்திலும், கையெழுத்திடப்படும்.