Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தூய்மையே சேவை இயக்கத்துக்கு பங்களிப்பை செய்த பிரபலமான நபர்கள் மற்றும் குழுமங்களுக்கு பிரதமர் பாராட்டு


“தூய்மையே சேவை” இயக்கத்துக்காக பங்களிப்பை செய்த பிரபலமான நபர்கள் மற்றும் குழுமங்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டுகளை தெரிவித்துள்ளார். தேசிய அளவிலான சுகாதார பிரச்சார இயக்கமான “தூய்மையே சேவை”, செப்டம்பர் 15-ல் தொடங்கி, அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியான இன்று முடிவுக்கு வந்துள்ளது. இது தூய்மை பாரத தினமாக கொண்டாடப்படுகிறது.

இதுதொடர்பாக டுவிட்டரில் அடுத்தடுத்து பதிவிட்டுள்ள பிரதமர், தூய்மை இந்தியா இயக்கத்துக்காக திரு.அனுபம் கெர், திரு.மோகன்லால், திருமதி,சந்தா கோச்சார், இந்தியா டுடே குழுமம், இந்தியா டிவி நியூஸ், சத்குரு ஜக்கி வாசுதேவ், இந்திய கிரிக்கெட் அணி, திரு.ராஜீவ் சந்திரசேகர், டெட்டால் இந்தியா, என்டிடிவி, ரிலையன்ஸ் பவுண்டேஷன், டாடா அறக்கட்டளைகள், திரு.அக்ஷய்குமார் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோர் மேற்கொண்ட முயற்சிகளுக்கும், ஆதரவு அளித்ததற்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

“அனுபம் ஜி அவர்களே, உங்களது செயல்பாடுகள் வரவேற்கத்தக்கவை. பிரபலமான நடிகர் மோகன்லால் அவர்களின் முயற்சிகள் அற்புதமானவை.

ஐசிஐசிஐ வங்கி குடும்பத்துடன் இணைந்து CKforCleanIndia (சந்தா ஸ்வச் பாரத்) மூலம் வெளியிட்ட முக்கிய செய்தி, தூய்மை இந்தியா இயக்கத்துக்கு முக்கிய பங்களிப்பை செய்துள்ளது.

தூய்மை குறித்து மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்ட இந்தியா டுடே குடும்பத்தை நான் பாராட்டுகிறேன். சஃபாய்கிரி (தூய்மை இந்தியாவுக்கு இந்தியா டுடே மேற்கொண்ட முயற்சி) விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

இந்தியா டிவி நியூஸின் முயற்சிகள் அற்புதமானவை. இது தூய்மையின் செய்தியை நாடு முழுவதும் விரிவாக பரப்பும்.

நமது ஆறுகளை தூய்மையாக வைத்திருப்பதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தும் அற்புதமான முயற்சிக்காக சத்குரு ஜக்கி வாசுதேவ் மற்றும் ஈஷா அறக்கட்டளையின் குழுவினருக்கு எனது வாழ்த்துகள்.

இந்தியாவை தூய்மையாக வைத்திருக்க வரவேற்கத்தக்க செய்தியை வெளியிட்டுள்ளது இந்திய கிரிக்கெட் அணி.

சிறந்த முயற்சிகள் ராஜீவ் அவர்களே.

டெட்டால் இந்தியா மற்றும் என்டிடிவி-யின் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். இந்த இணைப்பில் தூய்மை குறித்து பல்வேறு ஊக்குவிப்பு முயற்சிகள் உள்ளன. https://twitter.com/swachhindia.

தூய்மை இந்தியாவுக்காக நாடு முழுவதும் பாராட்டத்தக்க பணிகளை செய்துள்ளது ரிலையன்ஸ் அறக்கட்டளை. இந்த முயற்சிகளை இந்த இணைப்பில் காணுங்கள். https://twitter.com/ril_foundation/

டாடா அறக்கட்டளைக்கு வாழ்த்துக்கள்! தூய்மை இந்தியா இயக்கத்துக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் இளம் வல்லுநர்களைக் கொண்டு அவர்கள் மேற்கொண்ட முயற்சி (Prerak initiative) பாராட்டத்தக்கது.

சிறப்பாக எழுதியுள்ளீர்கள் அக்ஷய்குமார் அவர்களே. தூய்மை இந்தியா இயக்கத்துக்கு உங்களது உறுதியான ஆதரவை வரவேற்கிறேன்.

உங்களது மற்றும் வாழும் கலை குடும்பத்தின் முயற்சிகள் அற்புதமானவை! 125 கோடி இந்தியர்கள் இணைந்து, தூய்மை இந்தியாவை உருவாக்க முடியும்,” என்று பிரதமர் பதிவிட்டுள்ளார்.

*****