Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தூய்மை இந்தியா திட்டம் குறித்து நித்தி ஆயோக்கின் முதலமைச்சர்கள் துணை குழு அளித்துள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

தூய்மை இந்தியா திட்டம் குறித்து நித்தி ஆயோக்கின் முதலமைச்சர்கள் துணை குழு அளித்துள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

தூய்மை இந்தியா திட்டம் குறித்து நித்தி ஆயோக்கின் முதலமைச்சர்கள் துணை குழு அளித்துள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

தூய்மை இந்தியா திட்டம் குறித்து நித்தி ஆயோக்கின் முதலமைச்சர்கள் துணை குழு அளித்துள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

தூய்மை இந்தியா திட்டம் குறித்து நித்தி ஆயோக்கின் முதலமைச்சர்கள் துணை குழு அளித்துள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள்


நித்தி ஆயோக்கின் தூய்மை இந்தியா திட்டம் குறித்த முதல் அமைச்சர்கள் துணைக் குழுவின் தலைவரான ஆந்திர பிரதச முதலமைச்சர் திரு. சந்திரபாபு நாயுடு இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியிடம் குழு அறிக்கையை சமர்பித்தார்.

இதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு

• கழிப்பறைகள் கட்டுவது மற்றும் சுற்றுப்புற சுகாதாரம் குறித்து தற்போது காணப்படும் பழக்கவழக்கங்களை மாற்றுவது போன்றவற்றிக்கு சமமான முன்னுரிமை தரப்பட வேண்டும். அப்போதுதான் வெளி இடங்களில் மல ஜலம் கழிப்பது தவிர்க்கப்பட்டு கழிப்பறைகளின் பயன்பாடு அதிகரிக்கும்.

• தூய்மை இந்தியா திட்டம் குறித்த நடவடிக்கைகளை மதிப்பீடு செய்யவும் கண்காணிக்கவும் செயல்படுத்தவும் மத்திய மாநில அரசுகளுக்கு தேவையான உத்திகளை எடுத்துரைக்கவும் இத்தொழிலில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை பயன்படுத்த வேண்டும்.

• நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் சுற்றுப்புற சுகாதாரம் குறித்து மக்களிடையே தற்போது காணப்படும் பழக்கவழக்கங்களை மாற்றுவதற்காக ஒதுக்கப்படும் நிதியுடன் மேலும் 25 சதவீதம் ஒதுக்கப்பட வேண்டும். இதை மத்திய அரசு அளிக்க வேண்டும்.

• சுகாதாரம் குறித்த பாடத் திட்டங்களை முதல் வகுப்பில் இருந்தே பள்ளிகளில் கற்றுத்தர வேண்டும்.

• தூய்மை மற்றும் சுற்றுப்புற சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்த பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர் குழுக்களை அமைக்க வேண்டும்.

• கல்லூரிகள், பாலிடெக்னிக் மற்றும் மாநில தொழில்நுட்ப பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் திறன் மேம்பாடு குறித்த பாடங்கள் மற்றும் பட்டைய படிப்பை ஏற்படுத்த வேண்டும். தற்போது செயல்படுத்தப்படும் திறன் மேம்பாட்டு திட்டத்துடன் இது இணைக்கப்பட வேண்டும்.

• சுற்றுப்புற சுகாதாரம், கழிவு மேலாண்மை போன்றவை குறித்து ஆய்வு செய்யவும் உயர்கல்வியை அளிக்கவும் அதற்கான கல்வி நிறுவனங்களை அமைக்க வேண்டும். இதன் மூலம் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு முனைவர் பட்டத்தை வழங்கலாம்.

• இத்திட்டத்திற்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஆகியவை 75:25 என்ற அளவில் நிதி ஒதுக்க வேண்டும். மலைப்பாங்கான இடங்கள் உள்ள மாநிலங்களுக்கு இது 90:10 என்ற அளவில் இருக்க வேண்டும். பெட்ரோல், டீசல், தொலைத் தொடர்பு சேவைகள் ஆகியவற்றிக்கும் நிலக்கரி, அலுமினியம், இரும்புத் தாது ஆகியவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கும் மத்திய அரசு தூய்மை இந்தியா திட்ட வரியை விதிக்க வேண்டும். மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தை கண்காணிப்பதற்கான அமைப்பை அமைத்துள்ளதுபோல் மாநிலங்களிலும் இதற்கான அமைப்புகளை உருவாக்கப்பட வேண்டும்.

• பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மற்ற நிறுவனம் ஆகியவை அந்தந்த மாநிலங்களில் இத்திட்டத்தை நிறைவேற்ற சமுக பொறுப்புகளுக்காக ஒதுக்கப்படும் நிதியில் இருந்து ஒரு பகுதியை அளிக்க வேண்டும்.

• உள்ளாட்சி அமைப்புகளுக்கு 14வது நிதிக் குழு அளிக்கும் நிதி உதவியில் முதல் செலவாக தூய்மை இந்தியா திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். 14வது நிதிக் குழுவில் பரிந்துரைக்கப்படாத பகுதிகளுக்கும் மாநிலங்களுக்கும் வடகிழக்கு பகுதி மாநிலங்களுக்கும் மத்திய அரசு நிதி உதவியை அளிக்க வேண்டும்.

• மத்திய மாநில அரசுகள் துய்மை இந்தியா திட்ட பத்திரங்களை வெளியிடலாம்.

• தூய்மை இந்தியா திட்டத்தை நன்கு செயல்படுத்தவும் ஆதரவு அளிக்கவும், கண்காணிக்கவும் மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை உருவாக்கவும் தேசிய மற்ற மாநில அளவில் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

• மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றிற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளை கண்டறிய தேசிய தொழில்நுட்ப வாரியம் ஒன்றை அமைக்க வேண்டும். இதன் மூலம் இத்திட்டத்திற்கு தேவையான தொழில்நுட்ப அறிவு அளிக்கப்படும்.

• கழிவு மேலாண்மை தொழில்நுட்பத்தை குறைந்த செலவில் உருவாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

• கழிவுப் பொருள்களிலிருந்து மின்சக்தியை உற்பத்தி செய்யும் நிலையங்களுக்கு மின்கட்டண கொள்கையை மத்திய மின்சார அமைச்சகம் உருவாக்க வேண்டும். இதற்கான கட்டணத்தை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தொடர்ந்து மின்சக்தியை உற்பத்தி செய்யும் வகையில் நிர்ணயம் செய்ய வேண்டும். கழிவுப் பொருள்களிலிருந்து மின்சக்தியை உற்பத்தி செய்யும் நிலையங்களுக்கு மாநில மின்சார வாரியங்களும் மின்சாரத்தை அளிக்கும் நிறுவனங்களும் கட்டாயமாக இந்த நிறுவனங்களிலிருந்து மின்சாரத்தைப் பெற வேண்டும்.

• கழிவுப் பொருள்களிலிருந்து கிடைக்கும் இயற்கை உரங்களை விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்பட வேண்டும். ரசாயன உரங்களுக்கான மானியம் குறைக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் இயற்கை உரங்களுக்கான மானியம் உயர்த்தப்பட வேண்டும்.

• கழிவுப் பொருள்களை பயனுள்ள வகையில் பயன்படுத்தும் தனியார் நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வரிச்சலுகைகள் அளிக்க வேண்டும்.

• திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை திட்டங்களுக்கு தேவையான சாதனங்களை வாங்குவதற்காக மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் ஆகியவை இணைந்து அச்சாதனங்களுக்கான விலையை கணக்கிட வேண்டும்.
• திரவ கழிவு மேலாண்மை திட்டங்களை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து செயல்படுத்தலாம். மிக அதிக அளவில் தண்ணீர் பயன்படுத்தப்படும் தொழிற்சாலைகளை கண்டறிவது அவசியம்.

• கழிவுப் பொருள்களிலிருந்து மின்சக்தியை உற்பத்தி செய்யும் நிலையங்களையும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து செயல்படுத்த வேண்டும். இதில் அரசு மற்றும் தனியார் இணைந்து நடத்தும் நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றிற்கு தேவையான பொறுப்புகள் தரப்பட வேண்டும்.

• குடிசைப் பகுதிகளில் சாக்கடை வசதி இல்லாத இடங்களில் அமைக்கப்படும் கழிப்பறைகள் இயற்கை முறையிலான வழியில் அமைக்கப்பட வேண்டும்.

• நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் அமைக்கப்படும் பொது கழிப்பறைகள் வெவ்வேறு முறையில் நிர்வகிக்கப்படவும் செயல்படுத்தப்படவும் வேண்டும். கிராமப்புறங்களில் பொது கழிப்பறைகள் கிராம பஞ்சாயத்து மூலமும், நகர்ப்புறங்களில் கட்டண முறையிலும் கொண்டு வரப்பட வேண்டும்.

• அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு திறன் மேம்பாடு மற்றும் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.

• உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிடுவோரின் வீடுகளில் கழிப்பறைகள் இருப்பது அவசியம்.

• கழிவு மேலாண்மை சட்டங்கள் மீண்டும் ஆய்வு செய்யப்பட வேண்டும். இச்சட்டங்கள் கடுமையாக்கப்படவும் வேண்டும்.

• கழிவு மேலாண்மை செயல்பாடுகளுக்கு துப்புரவுப் பணியாளர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

• துப்புரவுப் பணிகளை கைகளினால் நேரடியாக மேற்கொள்ளும் முறை ஒழிக்கப்பட வேண்டும். இதற்கான 2013ஆம் ஆண்டு சட்டத்தை கடுமையாக அமலாக்க வேண்டும்.

• தூய்மை இந்தியா திட்டத்தை நன்கு செயல்படுத்தும் கிராம பஞ்சாயத்துகள், நகராட்சிகள், மாவட்டங்கள் மற்றும் மாநிலங்கள் ஆகியவற்றிற்கு ஒவ்வொரு ஆண்டும் தர வரிசைகளை அளிக்க வேண்டும். இதன் மூலம் போட்டியிடக்கூடிய மனப்பான்மை ஏற்படும்.

• ஒவ்வொரு மாதத்தில் ஒரு நாளிற்கும் ஒவ்வொரு ஆண்டில் ஒரு வாரத்திற்கும் (அக்டோபர் 2ஆம் தேதி முடிய) தூய்மை இந்தியா திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்த வேண்டும். இதில் நன்கு செயல்படுத்தும் கிராம பஞ்சாயத்துகள், வட்டாரம், நகராட்சிகள், மாவட்டங்கள் மற்றும் மாநிலங்கள் ஆகியவற்றிற்கு சிறந்த வெகுமதி அளிக்க வேண்டும். இவற்றிற்கு பிரதமர் மற்றும் மாநில முதலமைச்சர்கள் வெகுமதி அளிக்க வேண்டும்.

• சுகாதார திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட செயல்படாத கழிப்பறைகள் மீண்டும் நிதியுதவி அளிக்கப்பட்ட கட்டப்பட வேண்டும்.

• நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தனிப்பட்ட கழிப்பறைகளை கட்டுவது சமமான முறையில் கருதப்பட்டு அதற்காக அளிக்கப்படும் ஊக்கத்தொகை 15,000 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும்.

• இத்திட்டத்தில் துறைகளுக்கு இடையேயும், பல்வேறு பிரிவுகளுக்கு இடையேயும் உள்ள பொதுவான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நித்தி ஆயோக் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வெளி இடங்களில் மல ஜலம் கழிப்பதை தவிர்ப்பது மற்றும் தூய்மையை கடைபிடிப்பது ஆகியவற்றை மதிப்பீடு செய்ய தேவையான வழிமுறைகளை நித்தி ஆயோக் மாநில அரசுகளின் உதவியுடன் செயல்படுத்த வேண்டும். வெளியிடங்களில் மக்கள் மல ஜலம் கழிப்பது ஒழித்தல் குறித்து மாநிலங்களின் நடவடிக்கைகள் குறித்து தேசிய அளவில் வழிமுறைகளை வகுக்கவும், கண்காணிப்பை மேம்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை நித்தி ஆயோக் மேற்கொள்ள வேண்டும்.

***