பி.எம்.இந்தியா
ஆந்திர பிரதேச முதலமைச்சர் திரு. சந்திரபாபு நாயுடு, ஹரியானா முதலமைச்சர் திரு. மனோகர் லால், உத்திரகாண்ட் முதலமைச்சர் திரு. ஹரிஷ்ராவத் ஆகியோர் பிரதமரைச் சந்தித்து, தூய்மை இந்தியா திட்டம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட முதலமைச்சர்களின் துணைக் குழு அறிக்கையை இன்று அளித்தனர்.
முதலமைச்சர்களின் முயற்சிகள் குறித்து பிரதமர் அப்போது அவர்களைப் பாராட்டினார். தூய்மை இந்தியா திட்டத்தை நிறைவேற்றுவது கடினமாக இருந்தாலும் அதை நாம் நிறைவேற்ற முடியும் என்று பிரதமர் அப்போது கூறினார்.
தூய்மை இந்தியா திட்டம் குறித்து ஆராய்வதற்காக 2015ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி முதலமைச்சர்களின் துணைக் குழு அமைக்கப்பட்டது. 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8ம் தேதி நித்தி ஆயோக்கின் நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது. இந்தக் குழுவில் ஆந்திர பிரதேசம், பீகார், தில்லி, அரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மிசோரம், சிக்கிம், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் முதலமைச்சர்கள் உறுப்பினர்களாகவும் இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஆந்திர பிரதேச முதலமைச்சரும் இருந்தனர். இந்தக் குழு புதுதில்லி, சண்டிகர், பெங்களூரு ஆகிய இடங்களில் நான்கு முறை கூடி இது குறித்து விவாதித்தது.
இந்த துணைக் குழு கீழ்கண்டவற்றை விவாதிக்க முடிவு செய்தது.
i. தூய்மை இந்தியா திட்டத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதி மற்றும் நிதி நிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீட்டை வழங்குவதற்கு தேவையான வழிமுறைகளை ஆராய்வது.
ii. இத்திட்டத்தை செயல்படுத்தத் தேவையான நிறுவன அமைப்பு
iii. தூய்மை இந்தியா திட்டத்தில் குறிப்பிடப்பட்ட பல்வேறு பிரிவுகளில் செயல்படுத்தும் விதத்தில் தொழில்நுட்ப நடவடிக்கைகளைப் பரிந்துரைத்தல். இதில் கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் திடப் பொருள் மற்றும் திரவக் கழிவு மேலாண்மையை செயல்படுத்துவது குறித்த பரிந்துரைகள்
iv. தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதற்குத் தனியார் துறை பங்கு கொள்வது குறித்து ஆராய்தல். தனியார் துறையும் சமுக அமைப்புகளும் இதில் சிறந்த முறையில் பங்கேற்று செயல்படுத்துவதற்கான வழிமுறைகள்
v. தூய்மை இந்தியா திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதற்குத் தேவையான பரிந்துரைகள்
vi. தேவையான வேறு நடவடிக்கைகள்
மக்களிடையே சுத்தம் மற்றும் சுற்றுப்புற சுகாதாரம் ஆகியவற்றை கடைப்பிடிப்பதற்குத் தேவையான பழக்கவழக்கங்களை மாற்றி அவர்களை ஊக்குவிப்பது, அறிக்கையின் முக்கிய பரிந்துரையாக உள்ளது. இந்த மாற்றத்தைக் கொண்டுவர தகவல் தொடர்பு உத்திகளை உருவாக்குவதோடு தகவல்கள் அளித்தல், கல்வி மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றிக்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தல் ஆகியவை மிக முக்கியமாகும். பள்ளிக் கல்வியில் சுத்தம் மற்றும் சுற்றுப்புற சுகாதாரத்தை பாடத் திட்டங்களில் சேர்த்தல் மற்றும் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றில் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் தூய்மையை வலியுறுத்தும் வகையில் மாணவர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்தல்.
இத்திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் வகையில் மத்திய அரசுகளும் மாநில அரசுகளும் 75:25 என்ற விகிதத்தில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் மலைப் பகுதிகள் உள்ள மாநிலங்களில் இது 90:10 என்ற அளவில் இருக்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஆதாரத்தை ஏற்படுத்தத் தூய்மை இந்தியா பத்திரங்கள் வெளியிடுவது மற்றும் பெட்ரோல் டீசல், தொலைத் தொடர்பு சேவைகள், நிலக்கரி, அலுமினியம் மற்றும் இரும்புத் தாது ஆகியவை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஆகியவற்றிக்கு மத்திய அரசு தூய்மை இந்தியா வரி ஒன்றை விதிக்க வேண்டும் என்றும் மேலும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை கண்காணிக்கவும் ஆதரவு அளிக்கவும் வழிகாட்டவும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்று அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தை தெரிவு செய்யவும் அவற்றை கண்டறியவும் தேசிய அளவில் தொழில்நுட்ப கழகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இயற்கை உரத்திற்கு மானியத்தை உயர்த்தவும் ரசாயண உரங்களுக்கு அளிக்கப்படும் மானியத்தை குறைக்கவும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திட திரவ கழிவு மேலாண்மைச் செயல்பாடுகளை மேம்படுத்த மத்திய மாநில அரசுகள் தனியார் பிரிவுக்கு தேவையான வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அரசும் தனியாரும் இணைந்து இத்திட்டத்தை நடத்த தனியார் துறையை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கழிவுப் பொருட்களில் இருந்து மின் சக்தியை உற்பத்தி செய்து தொழிற்சாலைகளை பெரிய நகராட்சிகளிலும் மற்றும் இயற்கை உரத்தை சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் அமைக்க அரசும் தனியாரும் இணைந்து செயல்படலாம் என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
சமுதாய அளவில் பொதுக் கழிப்பறைகளை நிர்வகிக்கவும் அவற்றைச் செயல்படுத்தவும் நகர்புறங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய வெவ்வேறு நடவடிக்கைகளை அறிக்கை தெரிவிக்கிறது. பிரிவுகளுக்கு இடையேயும் துறைகளுக்கு இடையேயும் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க நித்தி ஆயோக் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பொது இடங்களில் மல ஜலம் கழிப்பதை தவிர்ப்பது குறித்து தேவையான மதிப்பீடுகளை நித்தி ஆயோக் மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
தூய்மை இந்தியா திட்டத்தை நன்கு செயல்படுத்தும் கிராம பஞ்சாயத்துகள், நகராட்சிகள், மாவட்டங்கள் மற்றும் மாநிலங்கள் போன்றவற்றிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஊக்கத் தொகை அளிப்பது குறித்தும் அறிக்கை தெரிவிக்கிறது. இதன் மூலம் அவற்றிக்கு இடையே போட்டி மனப்பான்மையும் உருவாகும். ஒவ்வொரு மாதத்தில் ஒரு நாளும் ஒராண்டில் ஒரு வாரமும் தூய்மை இந்தியா திட்டம் குறித்த செயல்பாடுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் இதை நன்கு செயல்படுத்தும் கிராம பஞ்சாயத்துகள், மாவட்டங்கள் மற்றும் மாநிலங்கள் ஆகியவற்றிக்கு வெகுமதி அளிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நகர்புறம் மற்றம் கிராமப்புறங்களில் ஒவ்வொரு இல்லத்திற்கும் கழிப்பறையை கட்டுவதற்கு அளிக்கப்படும் நிதி உதவி ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்பட வேண்டும் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
குப்பைகளை அகற்றுவோர், கழிவு மேலாண்மை நிர்வாகத்துடன் இணைக்கப்பட்டு அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படா வண்ணம் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், கழிவுகளை கைகளால் அகற்றும் முறையை மத்திய மாநில அரசுகள் ஒழிக்க வேண்டும் என்றும் இது குறித்த 2013ம் ஆண்டு சட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. கழிவு மேலாண்மை குறித்த அனைத்து சட்டம் மற்றும் விதி முறைகள் மீண்டும் சீரமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டியது அவசியம் என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
Niti Aayog CM's Sub Group on Swachh Bharat shared their report. My congratulations to CMs for their effort. http://t.co/QXiWEFJbWj
— Narendra Modi (@narendramodi) October 14, 2015
The report by CMs on Swachh Bharat contains insightful material on creating a Clean India. #MyCleanIndia http://t.co/uGr61oIFU4
— Narendra Modi (@narendramodi) October 14, 2015