பி.எம்.இந்தியா
தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பம் தொடர்பான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜுலை 08, 2016 அன்று கையெழுத்திடப்பட்டது. இது தொடர்பாக பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக்கு விவரிக்கப்பட்டது.
தகவல் மற்றும் தொழில்தொடர்புத் துறையில் இரு நாடுகளின் நிறுவனங்களுக்கிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்யும்.
இரு நாடுகளுக்கிடையேயான தகவல் தொடர்புத் துறை சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றுக்கு இடையே ஒத்துழைப்பையும், பரிமாற்றத்தையும் ஏற்படுத்த இந்த ஒப்பந்தம் வகை செய்யும்.