Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய ஒழுங்குமுறை பயன்பாட்டுக் கழக ஆணையர்களுக்கும், ஒழுங்கியக்கிகள் மன்றத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை ஒழுங்கியக்கிகள் மன்றத்திற்கும் (FOR) தேசிய ஒழுங்குமுறை பயன்பாட்டுக் கழக ஆணையர்களுக்கும் இடையிலான பெரிய அளவில் புதுப்பிக்கத்தக்க வளங்களை கட்டமைத்து ஒருங்கிணைப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ஒப்பந்தம் கீழ்கண்ட விரிவான விஷயங்களில் ஒத்துழைப்பை நல்குகிறது:

i) புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பெறுவதற்கான கட்டமைப்பை வடிவமைப்பதில் சர்வதேச அனுபவம்

ii) புதுப்பிக்கத்தக்க வளங்களை மேம்படுத்துவதில், மாநில மற்றும் தேசிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கோரிக்கைகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சான்றிதழ்களின் கட்டமைப்பு ஆகியவற்றின் ஒழுங்குமுறை தலையீடுகள்.

iii) சுமை எதிர்நோக்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகள்.
iv) ஒப்பந்தங்கள்/ஆற்றல் கொள்முதல் ஒப்பந்தங்கள்

v) புதுப்பிக்கத்தக்கவற்றை எதிர்நோக்கும் முறைகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை எதிர்நோக்குதல்

vi) புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஒருங்கிணைப்பு- ஒழுங்குமுறைகள் மற்றும் வாயு, சேமிப்பு மற்றும் தேவைசார் அணுகுமுறை ஆகியவற்றின் மூலம் சமன்பாட்டை ஏற்படுத்துதல்;

vii) ஒழுங்கை உறுதிப்படுத்த தண்டனைத் தொகை உள்ளிட்ட ஒழுங்குமுறை திட்டங்கள்.

viii) இயற்பியல் இயங்குமுறைகள், ஒழுங்குமுறைகள் மற்றும் சந்தைகள் என கூடுதல் சேவைகள்

ix) . தகவல் அலசல்கள் மற்றும் ஒழுங்குமுறை சார்ந்த முடிவுகளை எடுக்க உதவும் வகையில் செலவு ஆதாய அலசல்கள்.

தகவல் பரிமாற்றத்தை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஒருங்கிணைப்பு ஒழுங்குமுறைகள் மற்றும் வாயு, சேமிப்பு மற்றும் தேவைசார் அணுகுமுறைகள் மூலம் சமன்பாட்டை ஏற்படுத்தும் துறைகளில் இந்த ஒப்பந்தம் ஊக்குவிக்கிறது. இந்தியாவின் ஆற்றல் துறையின், பெரிய அளவில் புதுப்பிக்கத்தக்க வளங்களை கட்டமைத்து மின் கட்டமைப்பில் ஒருங்கிணைக்கும் பணிக்கு உதவுகிறது.

பின்னணி

ஒழுங்கியக்கிகளின் ஆணையம் ஆற்றல் அமைச்சகத்தின் பிப்ரவரி 16, 2005 தேதியிட்ட அறிவிக்கையின்படி, மின்சார சட்டம் 2003ன் பகுதி 166(2)ன்படி, மின் துறையை ஒழுங்குமுறைப்படுத்தும் நோக்கில் மத்திய மின்சார ஒழுங்கியக்க ஆணையம் (CERC), மாநில மின்சார ஒழுங்கியக்க ஆணையம் (SERCs) மற்றும் கூட்டு மின்சார ஒழுங்கிய ஆணையங்களின் (JERCs) மூலம் உருவாக்கப்பட்டது.

கடந்த காலங்களில் தேவைக்கேற்ப செயல்படும் மேலாண்மை மற்றும் ஆற்றல் திறன், ஒழுங்கியக்கிகள் மன்றம் ஆகிய துறைகளில் பணியாற்றும் வகையில், கலிபோர்னியா ஆற்றல் ஆணையம், கலிபோர்னியா பொது பயன்பாட்டு ஆணையம் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாரன்ஸ் பெர்க்லி தேசிய ஆராய்ச்சிக்கூடத்தின் மேலாண்மை மற்றும் இயக்க ஒப்பந்ததாரராக) ஆகியவை மின்சாரத்தேவை மற்றும் விநியோகத்திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் வருங்காலத்தில் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தன.

NARUC என்பது அத்தியாவசிய பயன்பாடுகளை ஒழுங்குபடுத்தும் ஆணையர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்க தேசிய ஆணையம் ஆகும். பரிந்துரைக்கப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான ஆற்றல்திறன் வணிகமயமாக்கல் ஒப்பந்தம் மற்றும் புத்தாக்க ஒப்பந்தத்தின் கீழ் உள்ளது. இந்தியா அமெரிக்கா இடையே ‘சுத்தமான ஆற்றல் மேம்பாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்லும் கூட்டணி’யின் கீழ் செயல்படும் ‘கட்டமைப்பை பசுமையாக்குதல்’ திட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

***