Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய பஞ்சாயத்து நாளன்று, ஜம்ஷேட்பூரிலிருந்து நாடெங்கும் உள்ள பஞ்சாயத்துகளுக்கு பிரதமர் உரையாற்றினார்.

தேசிய பஞ்சாயத்து நாளன்று, ஜம்ஷேட்பூரிலிருந்து நாடெங்கும் உள்ள பஞ்சாயத்துகளுக்கு பிரதமர் உரையாற்றினார்.


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தேசிய பஞ்சாயத்துகள் நாளான இன்று, ஜாம்ஷெட்பூரிலிருந்து, நாடெங்கும் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிடையே உரையாற்றினார்.

பாபா சாகேப் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று மாவ் பிரதேசத்தில் உருவான, கிராமோதய் சே பாரத் உதய் அபியான் என்ற திட்டமும் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

ஊரகப் பகுதிகளுக்கு கிடைக்கும் வசதிகளும், சேவைகளும், நகரங்களுக்கு இணையானதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

பஞ்சாயத்துகளின் பிரதிநிதிகள், தங்களின் பதவிக்காலத்தை மக்களின் வாழ்வில் ஸ்திரமான மாற்றத்தை உருவாக்குவதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

குறிப்பாக பெண் உறுப்பினர்கள், கழிப்பறைகள் கட்டுவது போன்ற விஷயங்களில் தலைமைப் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார்.

குழந்தைகளின் கல்வியில் பஞ்சாயத்துகள் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், குழந்தைகள் பள்ளி செல்வதை நிறுத்துவது பஞ்சாயத்து உறுப்பினர்களை கவலையடையச் செய்ய வேண்டும் என்றார்.

பஞ்சாயத்துகள் பட்ஜெட்டைத் தாண்டி ஜன் சுவிதா திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு, மேடையிலிருந்து இறங்கி வந்த பிரதமர், நாடெங்கிலும் இருந்து ஜாம்ஷெட்பூருக்கு வருகை தந்திருந்த பஞ்சாயத்து பிரதிநிதிகளை சந்தித்தார். பிரதமரின் பாட்னா பேரணியின்போது, நடந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தவரின் மனைவி மற்றும் மகளையும் பிரதமர் சந்தித்தார்.

***