பி.எம்.இந்தியா
தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் நான்கு புதிய இயக்குநர் பதவிகளை உருவாக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரியானாவின் குருஷ்ஷேத்ரா, மத்திய பிரதேசத்தின் போபால், அசாமின் ஜோர்ஹட் மற்றும் ஆந்திராவின் விஜயவாடா ஆகிய இடங்களில் அமைய உள்ள புதிய தேசிய வடிவமைப்பு நிறுவனங்களில் இந்த இயக்குநர் பதவிகள் உருவாக்கப்படும்.
2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்நிறுவனங்களை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீட்டிற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பிண்ணனி
2007ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேசிய வடிவமைப்பு கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தேசிய வடிவமைப்பு கொள்கை செயல் திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று அகமதாபாத்தில் உள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனத்தைப் போல நான்கு தேசிய வடிவமைப்பு நிறுவனங்களை அமைப்பதாகும். இதன் மூலம் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் வடிவமைப்புத் துறையில் தரமான கல்வி பெற முடியும்.