Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு விளையாட்டு ஆர்வலர்களுக்கு பிரதமர் வாழ்த்து


 

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு விளையாட்டு ஆர்வலர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு அனைத்து விளையாட்டு ஆர்வலர்களுக்கும் வாழ்த்துகள். தனிச்சிறப்பு மிக்க ஹாக்கி வீரர், மேஜர் தியான்சந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு நான் புகழ் அஞ்சலி செலுத்துகிறேன். ஆரோக்கியமான இந்தியாவிற்கு பங்களிக்கும் விளையாட்டு மற்றும் உடல்தகுதி தொடர்பான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

பல்வேறு விளையாட்டு போட்டிகளில் இந்தியாவின் பிரதிநிதியாக பங்கேற்ற அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன். அவர்களின் கடின உழைப்பும், உறுதியும் பல்வேறு சாதனைகளுக்கு வழி வகுத்துள்ளது. விளையாட்டு துறைக்கு இந்த ஆண்டு சாதகமாக அமைந்து, ஆசிய விளையாட்டு போட்டிகள் 2018 மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் நமது இந்திய வீரர்கள் மிக சிறப்பாக விளையாடியுள்ளனர்” என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

  

***