Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேச வளர்ச்சி மற்றும் உலகளாவிய நன்மைக்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தேசிய அறிவியல் தினத்தன்று உறுதியேற்போம் – பிரதமர் திரு நரேந்திர மோடி


தேசிய அறிவியல் தினமான இன்று (28.02.2026), நமது நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் ஆராய்ச்சி, புதுமை மற்றும் அறிவியல் ஆர்வத்தின் சிறந்த உணர்வை நாம் கொண்டாடுகிறோம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார்.

சர் சி.வி. ராமனால் ராமன் விளைவு என்ற புரட்சிகரமான கண்டுபிடிப்பு உருவாக்கப்பட்டதை இந்த நாள் நினைவுகூர்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்த ராமன் விளைவு என்ற கண்டுபிடிப்பு இந்திய ஆராய்ச்சியை உலக வரைபடத்தில் உறுதியாக நிலைநிறுத்தியதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நமது இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பது, ஆராய்ச்சிச் சூழல் அமைப்புகளை வலுப்படுத்துவது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை தேசிய வளர்ச்சி மற்றும் உலகளாவிய நன்மைக்காகப் பயன்படுத்துவது என்ற நமது உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் எடுத்துரைத்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“தேசிய அறிவியல் தினமான இன்று, நமது நாட்டை முன்னேற்றப்பாதையில் இயக்கும் ஆராய்ச்சி, புதுமை, அறிவியல் ஆர்வம் ஆகியவற்றின் உணர்வை நாம் கொண்டாடுகிறோம்.

இந்த நாள் சர் சி.வி. ராமனால் உருவாக்கப்பட  ராமன் விளைவு என்ற புரட்சிகரமான கண்டுபிடிப்பை நினைவுகூரும் நாளாகும். இந்தக் கண்டுபிடிப்பு இந்திய ஆராய்ச்சியை உலக வரைபடத்தில் உறுதியாக நிலைநிறுத்தியது.

நமது இளைஞர்களை மேம்படுத்துதல், ஆராய்ச்சிச்சூழல் அமைப்புகளை வலுப்படுத்துதல், அறிவியல் – தொழில்நுட்பத்தை தேசிய வளர்ச்சிக்கும் உலகளாவிய நன்மைக்காகப் பயன்படுத்துதல் என்ற நமது இலக்குகளை வலுப்படுத்த மீண்டும் உறுதியேற்போம்.”

***

(Release ID: 2233830)

TV/PLM/RK