Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேர்தல் மேலாண்மை மற்றும் நிர்வாகத் துறையில் ஒத்துழைப்புக்கென இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் மாலத் தீவு தேர்தல் ஆணையத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


தேர்தல் மேலாண்மை மற்றும் நிர்வாகத் துறையில் ஒத்துழைப்புக்கென இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் மாலத் தீவு தேர்தல் ஆணையத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்பந்தத்தில், தேர்தல் நடைமுறை, தகவல் பரிமாற்றத்தில் ஆதரவு, நிறுவனத்தை வலுப்படுத்துதல் மற்றும் திறன் மேம்பாடு, பணியாளர்களுக்குப் பயிற்சி, முறையான ஆலோசனைகளை நடத்துதல் போன்ற அமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுத் துறைகளில் அறிவு மற்றும் அனுபவத்தை பகிர்ந்து கொள்வது அடங்கும்.

இந்த உத்தேசப் புரிந்துணர்வு ஒப்பந்தம், இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தி, தொழில்நுட்ப உதவி / திறன் ஆதரவு ஆகியவற்றை மாலத்தீவு தேர்தல் ஆணையத்திற்கு அளிப்பதை நோக்கமாகக் கொண்டது. இதனையடுத்து, தேர்தல் மேலாண்மை மற்றும் நிர்வாகத் துறைகளில் ஒத்துழைப்புக்கு வாய்ப்புகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.