Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தொடங்கிடு இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

தொடங்கிடு இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

தொடங்கிடு இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி


தொடங்கிடு இந்தியா திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். ஷெட்யூல்டு வகுப்பினர்பு பழங்குடியினர் மற்றும் பெண்கள் தொழில் தொடங்குவதை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம் இந்த வகுப்பை சேர்ந்த குறைந்தது 2 விண்ணப்பதாரர்களுக்கு தொழில் தொடங்குபவர்களுக்கு கடன் உதவி வழங்கப்படும். கடன்தொகை 10 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரை வழங்கப்படும். இந்த விழாவில் ஏராளமான இ.ரிக்ஷாக்களும் வினியோகிக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியின் போது பாபு ஜெகஜீவன் ராமுக்கு அவரது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மரியாதை செலுத்தினார். அவர் நாட்டுக்காக பல்வேறு இக்கட்டான சூழ்நிலையில் மேற்கொண்ட பணிகளை பிரதமர் நினைவு கூர்ந்தார்.

வேலை தேடுவோரை வேலை வழங்குவோராக மாற்ற வேண்டும் என்ற அவரது எண்ணத்தினை வெளிப்படுத்தினார். தொடங்கிடு இந்தியா திட்டம் தலித் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வியல் நிலைமையை மாற்றும். என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்..

இதுபோன்ற ஏழை மக்களின் மேம்பாடும் அதிகரித்தால், இந்தியாவின் வளர்ச்சி பயணம் மேலும் வலுவானதாக அமையும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வியை அளிக்க வேண்டும். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு அதை கண்டிப்பாக வழங்க வேண்டும்.

முன்னதாக திட்டப்பயனாளிகளில் சிலருடன் தேனீர் அருந்தியபடி பிரதமர் கலந்துரையாடினார். அப்போது இ.ரிக்ஷாக்கள் தங்கள் வாழ்க்கை நிலையை எப்படி மாற்றப்போகிறது என்று அவர்கள் பிரதமரிடம் எடுத்துரைத்தனர். அவர்களிடம் பிரதமர் மோடி, அவர்களுடைய குழந்தைகளுக்கு கல்வியை கொடுக்குமாறு வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியின் போது ஒரு இ. ரிக்ஷாவை மேடையிலேயே வாடகைக்கு அமர்த்திய பிரதமர் அதில் சிறிது தூரம் பயணமும் செய்தார். இதற்கான பயண கட்டணத்தை அவர் செல்போன் மூலம் செலுத்தினார்.

•••••