Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நதிகள் இணைப்புத் திட்டம் குறித்த செயல்முறை அறிக்கை – மத்திய அமைச்சரவை ஒப்புதல்


நதிகள் இணைப்புத் திட்டம் குறித்து மத்திய நீர் வளம் அமைச்சகம் தயாரித்துள்ள நிலைமை-செயல்முறை அறிக்கைக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 2002 ஆம் ஆண்டின் நீதிப்பேராணை விண்ணப்பம் (ரிட் மனு) என் 512 மற்றும் 2002 ஆம் ஆண்டின் நீதிப்பேராணை விண்ணப்பம் என் 668 ஆகியவற்றை கொண்டு உச்ச நீதிமன்றம் 27.02.2012 அன்று வெளியிட்ட தீர்ப்பிற்கு உடன்பட்டு இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

தேசிய தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் செயல்படவிருக்கும் நதிகள் இணைப்புத் திட்டத்தை கண்காணிப்பதற்கு இந்த அறிக்கை உதவியாக அமையும். சிறப்பு குழு தயாரிக்கும் இந்த அறிக்கை ஆண்டிற்கு இரண்டு முறை அமைச்சரவை முன் சமர்பிக்கப்படும். நாட்டின் நன்மைக்காக எடுக்கப்படும் இந்த நதிகள் இணைப்புத் திட்டம் உரிய நேரத்தில் உரிய வேகத்தில் செயல்படுத்தப்படுவதை இந்த அறிக்கை உறுதிசெய்யும்.

*****