பி.எம்.இந்தியா
நமது ஒட்டுமொத்த நல்வாழ்வின் அடிப்படையாக இருப்பது மனநலம் என்பதற்கு சக்திமிக்க நினைவூட்டலாக உலக மனநல தினம் திகழ்கிறது என பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அதிவேகமான இன்றைய உலகில் மற்றவர்களிடம் காட்டும் கருணையின் முக்கியத்துவத்தை இந்த தினம் அடிக்கோடிட்டு காட்டுவதாக பிரதமர் கூறியுள்ளார். மனநலம் குறித்த உரையாடல்கள் மைய நீரோட்டத்திற்கு வருகின்ற சூழல்களை உருவாக்கும் கூட்டு முயற்சிகளை அவர் வலியுறுத்தியுள்ளார்.
மனநலத்துறையில் பணியாற்றுவோருக்கும் மற்றவர்களை குணப்படுத்தி மகிழ்ச்சி கொள்ள உதவிசெய்வோருக்கும் திரு மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“நமது ஒட்டுமொத்த நல்வாழ்வின் அடிப்படையாக இருப்பது மனநலம் என்பதற்கு சக்திமிக்க நினைவூட்டலாக உலக மனநல தினம் திகழ்கிறது. அதிவேகமான இன்றைய உலகில் மற்றவர்களிடம் காட்டும் கருணையின் முக்கியத்துவத்தை இந்த தினம் அடிக்கோடிட்டு காட்டுகிறது. மனநலம் குறித்த உரையாடல்கள் மைய நீரோட்டத்திற்கு வருகின்ற சூழல்களை உருவாக்கும் கூட்டு முயற்சிகளுக்காகவும் நாம் பாடுபடுவோம். மனநலத்துறையில் பணியாற்றுவோருக்கும் மற்றவர்களை குணப்படுத்தி மகிழ்ச்சி கொள்ள உதவிசெய்வோருக்கும் எனது பாராட்டுகள்.”
***
(Release ID: 2177253 )
SS/SMB/AG/KR
World Mental Health Day serves as a powerful reminder that mental health is a fundamental part of our overall well-being. In a fast-paced world, this day underscores the importance of reflecting and extending compassion to others. Let us also work collectively to create…
— Narendra Modi (@narendramodi) October 10, 2025