Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நமது தாய் நாட்டின் புனிதமான பாரம்பரியத்தை எடுத்துரைத்து, உலகளாவிய வளமைக்காக பிரார்த்திக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்


நமது தாய்நாடு ஆன்மீக பயிற்சிக்கும் வழிபாட்டிற்கும் துணிச்சல், மற்றும் உலகளாவிய நலனுக்குமான புனித பூமியாக திகழ்கிறது என்று குறிப்பிட்டு ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (21.05.2026) பகிர்ந்துள்ளார்.

மகத்தான பாரம்பரியத்தையும் தொன்மைமிக்க கலாச்சாரத்தையும் கொண்ட இந்தப் புனித பூமி அனைவரையும் எப்போதும் மகிழ்ச்சியுடனும் வளமையுடனும் வைத்திருக்க வேண்டும் என்ற மனமார்ந்த விருப்பத்தை திரு மோடி வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

நமது முன்னோர்கள் மகத்துவமிக்க, கருணைமிக்க செயல்களை நிகழ்த்திய, தெய்வங்கள் அநீதி சக்திகளை தோற்கடித்த, கால்நடைகளும், சக்தியும் நிறைந்த தாய்நாடு நமக்கு பரந்த இடத்தையும் வளமையையும் வழங்கட்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263527&reg=3&lang=1

***

SS/IR/KPG/KR