Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நல்வாழ்வுக்கான சான்றுகள் சார்ந்த அணுகுமுறையாக யோகா எவ்வாறு பரிணமித்துள்ளது என்பது குறித்த கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


கடந்த பத்து ஆண்டுகளில், பாரம்பரிய நல்வாழ்வுப் பயிற்சியிலிருந்து ஆரோக்கியம், நல்வாழ்வு ஆகியவற்றுக்கான சான்றுகள் சார்ந்த அணுகுமுறையாக யோகா எவ்வாறு பரிணமித்துள்ளது என்பது குறித்து மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் எழுதிய கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். அறிவியல் ஆராய்ச்சி, டிஜிட்டல் கண்டுபிடிப்பு, உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவை யோகாவின் நன்மைகளை உலகம் நன்கு புரிந்துகொள்ள உதவுவதாக திரு நரேந்திரமோடி குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“கடந்த பத்து ஆண்டுகளில், பாரம்பரிய நல்வாழ்வு நடைமுறையிலிருந்து ஆரோக்கியம், நல்வாழ்வு ஆகியவற்றுக்கான சான்றுகள் சார்ந்த அணுகுமுறையாக யோகா எவ்வாறு பரிணமித்துள்ளது என்பதை மத்திய இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் (@mpprataprao) விரிவாகக் கூறியுள்ளார். அறிவியல் ஆராய்ச்சி, டிஜிட்டல் கண்டுபிடிப்புகள், உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவை யோகாவின் நன்மைகளை உலகம் நன்கு புரிந்துகொள்ள உதவுகின்றன.”

***

(Release ID: 2238930)

TV/PLM/RJ