Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நவரத்தினக் கற்கள் மற்றும் ஆபரணத் தொழில் துறையினர் உலக அளவில் வர்த்தகம் புரியும் வகையில் விரிவாக்கப் பிரதமர் வேண்டுகோள்

நவரத்தினக் கற்கள் மற்றும் ஆபரணத் தொழில் துறையினர் உலக அளவில் வர்த்தகம் புரியும் வகையில் விரிவாக்கப் பிரதமர் வேண்டுகோள்


நவரத்தினக் கற்கள் மற்றும் ஆபரணத் தொழில் துறையினர் உள்நாட்டுச் சந்தைகளுக்கு அப்பாற்பட்டு உலக அளவில் வர்த்தகம் புரியும் வகையில் விரிவாக்க வேண்டுமென பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அகில இந்திய நவரத்தினக் கற்கள் ஆபரணங்கள் வர்த்தக இணையம் இன்று புதுதில்லியில் ஏற்பாடு செய்திருந்த பிரதமருக்கான பாராட்டு நிகழ்ச்சியில் பேசிய திரு நரேந்திர மோடி இந்த நோக்கத்தை நிறைவேற்ற புதுமை படைத்தலும் திறன் மேம்பாடும் அவசியம் என்றார். கைகளால் செய்யப்பட்ட ஆபரணங்களுக்கு உலக அளவில் தேவை அதிகரித்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

கலால் வரி தொடர்பான சமீபத்திய பிரச்சினைகள் பற்றி குறிப்பிட்ட பிரதமர் இந்த பிரச்சினைகள் நவரத்தினக் கற்கள் ஆபரணத் தொழில்துறையினர் அரசு செயல்படும் விதத்தை தெரிந்து கொள்வதாக அமைந்திருந்தன என்றும் மேலும் இந்த்த் துறையின் நுணுக்கங்களை நன்றாக அறிந்து கொள்ள அரசுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தன என்றும் கூறினார். இரு தரப்பினரும் ஒருவரையொருவர் வெற்றி கொண்டனர் என்றார் அவர்.

கணக்கில் காட்டப்படாத வருமானத்தை கொண்டிருப்போர் அனைவரும் வருமானத்தை தெரியப்படுத்தவதற்கான கடைசி நாள் வரும் செப்படம்பர் 30 – ந் தேதிக்கு முன்னதாக அறிவித்து பலனடையுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார்.