Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாகாலாந்து கிராம தலைவர்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் பிரதமருடன் சந்திப்பு


நாகாலாந்து கிராம தலைவர்களின் சம்மேளனத்தின் 15 பேர் கொண்ட பிரதிநிதிகள் தில்லியில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சம்மேளனத்தின் உறுப்பினர்களாக நாகாலாந்தின் அனைத்து கிராம தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்ததில் மகிழ்ச்சியை தெரிவித்த பிரதிநிதிகள், நாகா அமைதி நடவடிக்கையில் பிரதமர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தங்கள் முழுமையான ஆதரவை தெரிவித்தனர். இந்த அமைதி முயற்சிக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். அனைத்து சிவில் அமைப்புகளும் பழங்குடியினரும் அமைதியை விரும்புவதாக தெரிவித்தனர்.

கிராம தலைவர்களின் பிரதிநிதிகளை வரவேற்பதில் மகிழ்ச்சியை தெரிவித்த பிரதமர், கிராம தலைவர்கள் அமைதிக்கான செய்தியுடன் வந்திருப்பதையறிந்து தான் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டார். அவர்கள் முழுமனதோடு பாராட்டியதையும் ஆதரவு தெரிவித்ததற்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.

****