Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2018 – க்கு முன்பு பிரதமர் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கை


வணக்கம் நண்பர்களே!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. குடியரசுத் தலைவரின் உரையுடன் அவை தொடங்கும். கடந்த கூட்டத்தொடரில் எங்களின் முயற்சியாலும், இஸ்லாமிய பெண்களுக்கு உரிமை அளிக்கும் வகையில் முத்தலாக் விவகாரத்தில் எந்தவிதமான அரசியலும் இருக்காது என்று நாட்டு மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. உச்சநீதிமன்றம், ஆணைபிறப்பித்தும் நாடாளுமன்றத்தில் முத்தலாக மசோதா நிறைவேற்றப்படவில்லை. இஸ்லாமிய பெண்களின் உரிமையைக் காப்பாற்றும் வகையில் முத்தலாக் மசோதாவை நிறைவேற்ற நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கைகோர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இஸ்லாமிய பெண்களுக்கு 2018 புதிய ஆண்டின் நமது சிறந்த பரிசாகும்.

பட்ஜெட் கூட்டத் தொடர்  மிகவும் முக்கியமானது. இந்தியப் பொருளாதாரம் குறித்து மொத்த சர்வதேச சமூகமும் நம்பிக்கையுடன் உள்ளது. சர்வதேச பொருளாதாரத் தகுதி நிலை வழங்கும் முகமைகள், உலக வங்கி, சர்வதேசப் பண நிதியம் ஆகியவை இந்தியாவின் வளர்ச்சி மற்றும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் இருக்கும் இந்நேரத்தில்  பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறுகிறது. வேகமாக வளர்ந்து வரும் நாட்டின் பொருளாதாரத்திற்கு இந்த பட்ஜெட் சக்தி அளிக்கும். சாதாரண மனிதரின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் இந்த பட்ஜெட் நிறைவேற்றும். பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்து ஒரு மாதத்திற்குப் பின்பு பல்வேறு குழுக்கள் பட்ஜெட் திட்டங்கள் குறித்து விவாதிக்கும். இதற்கு முன்பு நடைபெற்ற விவாதங்கள் அரசியல் லாபங்களைத் தாண்டி தேசிய நலனுக்காக நடைபெற்றன. கட்சிப் பாகுபாடின்றி ஆளும் கட்சி உறுப்பினர்களும் பட்ஜெட் குறைகளை எடுத்துரைத்தனர். எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை எடுத்துரைத்தனர். எனவே இது விவாதங்களுக்கான ஆரோக்கிய சூழலுக்கு வழிவகுக்கிறது.

நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில், குழுக்களுக்கு இடையே நடைபெறும் விவாதங்களின் உதவியை முழுவதுமாகப் பயன்படுத்தி நமது பட்ஜெட்டின் மூலம் சாதாரணக் குடிமகனும் பயன்பெறும் வகையில் அமைவதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன். தலித்துகள், ஒதுக்கப்பட்ட, வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் லாபத்திற்கு அணுக வாய்ப்பில்லாத மக்களுக்கு சென்றடைவதே நமது குறிக்கோளாகும். கிராமத்து மக்கள், ஏழைகள், விவசாயிகள், கூலித் தொழிலாளிகள் பட்ஜெட்டின் மூலம் அதிகபட்ச லாபம் பெறுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். விரிவான விவாதம் செய்து நல்ல ஆலோசனைகளுடன் எதிர்காலத்திற்கான வழியை நாம் உருவாக்குவோம்.

 

***