Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாடுமுழுவதும் கொண்டாடப்படும் பல்வேறு விழாக்களையொட்டி மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


நாடுமுழுவதும் கொண்டாடப்படும் பல்வேறு விழாக்களையொட்டி மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“सभी देशवासियों को नव संवत्सर की हार्दिक शुभकामनाएं। मैं कामना करता हूं कि नया वर्ष सबके जीवन में सुख, शांति, समृद्धि और आरोग्य लेकर आए। हमारा देश उन्नति की राह पर और तेज गति से अग्रसर हो।
அனைவருக்கும் உகாதி வாழ்த்துக்கள்! உங்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேற இந்த நன்னாள் வழிவகுக்க நான் பிரார்த்திக்கிறேன். ஒவ்வொருவரும் மகிழ்ச்சியோடும் சிறந்த ஆரோக்கியத்தோடும் வாழ வாழ்த்துக்கள்.

மணிப்பூரின் நன்மக்களுக்கு சாஜிபூ நாங்மா பன்பா செரோபா வாழ்த்துக்கள். இந்த சிறப்புமிக்க விழா நமது சமூகத்தில் மகிழ்ச்சி, நல்லிணக்கம் என்ற உணர்வை மேலும் அதிகரிக்கட்டும்.

நவ்ரே முபாரக்! தனிச்சிறப்புமிக்க மகிழ்ச்சியோடு இந்த ஆண்டு நிறைந்திருக்க பிரார்த்திக்கிறேன். வரும் காலங்களில் ஒவ்வொருவரின் விருப்பங்களும் நிறைவேற வாழ்த்துகிறேன். காஷ்மீர் பண்டிட்டுகளின் கலாச்சாரம் உண்மையில் தனித்தன்மையுடையது. இந்தச் சமூகம் அதீத தைரியத்தையும், விடாமுயற்சிக்கான மாபெரும் உணர்வையும் பெற்றது” என்று பிரதமர் கூறியுள்ளார்.