Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாடு முழுவதும் கொண்டாடப்படும் பல்வேறு விழாக்களையொட்டி மக்களுக்குப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்


நாடு முழுவதும் கொண்டாடப்படும் பல்வேறு விழாக்களையொட்டி மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார் .

“இந்தியா முழுவதும் பல்வேறு விழாக்களை நாம் கொண்டாடுகிறோம் . பாரம்பரிய முறையிலான காலண்டர்படி புத்தாண்டையும் நாம் தொடங்குகிறோம். உகாதி, குடி படவா, நவ்ரே, சாஜிபு செராவ்பா ஆகியவற்றுக்கு வாழ்த்துக்கள். இந்தப் புனித விழாக்கள் நமது வாழ்க்கையில் நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், வளத்தையும் கொண்டு வரட்டும்.

கொவிட்- 19 என்ற கொடிய நோயை எதிர்த்து நமது தேசம் போராடும் காலத்தில் இந்த விழாக்களை நாம் எதிர்நோக்குகிறோம். இந்த விழாக்கள் வழக்கமானதாக இருக்காது .ஆனால், நமது சூழ்நிலைகளை வெல்வதற்கான மன உறுதியை இவை வலுப்படுத்தும் . கொவிட் – 19க்கு எதிரான போராட்டத்தில் நாம் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம்”

“மணிப்பூரின் எனது சகோதர சகோதரிகளுக்கு சாஜிபு செராவ்பா வாழ்த்துகள் ! ஒவ்வொருவரும் அமைதி மற்றும் வளத்துடன் ஆசீர்வதிக்கப்படட்டும். மக்களின் நல்ல ஆரோக்கியத்திற்கான சிறப்பு பிரார்த்தனைகள்.

நவ்ரே முபாரக்!

இந்த விழா ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியால் நிறைக்கட்டும்.

கொவிட் – 19க்கு எதிராக தேசம் எதிர்நோக்கியுள்ள முக்கியமான போரில் வெற்றி பெற நாம் அனைவரும் ஒன்றிணைய முன்வருவோம்” இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.