Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாட்டின் சில பகுதிகளில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்களுக்கு பிரதமர் கண்டனம்


நாட்டின் சில பகுதிகளில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

“இன்று நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் ஆழ்ந்த வேதனையை அளிக்கின்றன. இந்த வன்முறைச் சம்பவங்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அமைதிகாக்குமாறு அனைவரையும் நான் வலியுறுத்துகிறேன்.

சட்டம் ஒழுங்கு நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் உள்துறை செயலருடன் நிலைமையை நான் ஆய்வு செய்தேன்.

அங்கு இயல்பு நிலை திரும்ப இரவுபகல் பாராது பணியாற்றும்படியும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அதிகாரிகளை நான் வலியுறுத்தியுள்ளேன்.” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

****