Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நிதித் தீர்வு மற்றும் சேமிப்பு காப்பீட்டு மசோதா 2017-ஐ அறிமுகம் செய்யும் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்


நிதித் தீர்வு மற்றும் சேமிப்பு காப்பீட்டு மசோதா 2017-ஐ அறிமுகம் செய்யும் மத்திய அரசின் திட்டத்துக்கு திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் நிதித்துறை நிறுவனங்கள் திவாலாகும் நிலை ஏற்படும்போது, அதனை எதிர்கொள்வதற்கு குறிப்பிட்ட நிதித்துறை நிறுவனங்களுக்கு விரிவான தீர்வு வழிமுறையை இந்த மசோதா ஏற்படுத்தும்.

நிதித்தீர்வு மற்றும் சேமிப்பு காப்பீடு மசோதா 2017, நிறைவேற்றப்படும் போது, அந்த மசோதா, தீர்வுக் கழகத்தை ஏற்படுத்த வழிவகுக்கும். மசோதாவின் அட்டவணை பட்டியலில் இடம்பெற்றுள்ள சட்டங்களை நீக்கவோ, தீர்வு அடிப்படையிலான திருத்தங்களை மேற்கொள்ளவோ வழிசெய்யும். இந்த மசோதாவால், சேமிப்பு காப்பீட்டு அதிகாரம் மற்றும் பொறுப்புகளை தீர்வுக் கழகத்துக்கு மாற்றுவதற்காக சேமிப்பு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகம் சட்டம் 1961 நீக்கப்படும்.

தீர்வுக் கழகமானது, நிதி அமைப்பின் நிலைத்தன்மை மற்றும் மீட்புத் திறனை பாதுகாக்கும்; ஏற்றுக் கொள்ளத்தக்க அளவு வரை, நுகர்வோரை பாதுகாக்கும்; மற்றும் பொதுமக்களின் நிதியை முடிந்தவரை பாதுகாக்கும்.

நிதித்துறை சாராத நிறுவனங்களின் நொடிப்பு நிலைமையை தீர்ப்பதற்காக நொடிப்பு மற்றும் திவாலாதல் விதி, 2016-யை மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றியுள்ளது. திட்டமிடப்பட்டுள்ள மசோதாவானது, நிதித்துறை நிறுவனங்களுக்கு தீர்வு வழிமுறையை அளிக்கும் வகையில், திவாலாதல் விதிக்கு வலு சேர்க்கும். இந்த மசோதா செயல்படுத்தப்படும்போது, திவாலாதல் விதியுடன் இணைந்து, பொருளாதாரத்துக்கு விரிவான தீர்வு வழிமுறையாக அமையும்.

நிதித் தீர்வு மற்றும் சேமிப்பு காப்பீட்டு மசோதா 2017, நிதி நெருக்கடி சமயத்தில், நிதி சேவை அளிக்கும் நிறுவனங்களின் நுகர்வோருக்கு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்த விரும்புகிறது. நிதி நெருக்கடி ஏற்படும்போது, நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிறுவனங்கள், அதிலிருந்து மீண்டுவருவதற்காக பொதுமக்களின் நிதியைப் பயன்படுத்துவதை குறிப்பிட்ட அளவுக்குள் வரையறுத்து நிதி சேவை நிறுவனங்களை ஒழுங்குபடுத்துகிறது. நெருக்கடி காலத்தில் அதனை எதிர்கொள்வதற்கு தேவையான வழிவகைகளை ஏற்படுத்துவதுடன், போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்தி, பொருளாதாரத்துக்கு நிதி நிலைத்தன்மையை ஏற்படுத்த உதவுகிறது.

இந்த மசோதா, அதிக அளவில் உள்ள சில்லறை சேமிப்பாளர்கள் பயனடைவதற்காக தற்போதைய சேமிப்பு காப்பீட்டு வழிமுறையை ஒழுங்குபடுத்துவதையும், வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், நெருக்கடியில் உள்ள நிதி நிறுவனங்களுக்கு, தீர்வுகாண்பதற்கான நேரம் மற்றும் செலவைக் குறைக்க வழிவகை செய்கிறது.

****