Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நியுயார்க் நகரில் க்ரூப் 4 நாடுகள் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்கிறார்


சான் ஜோஸ் நகரில் உள்ள டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு வருகை தந்து டிஜிட்டல் இந்தியா மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப இரவு விருந்தில் கலந்து கொள்கிறார் பிரதமர்

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், நியுயார்க் நகரில், 26 செப்டம்பர் 2015 அன்று, க்ரூப் 4 நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். ப்ரேசில், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை உள்ளிட்டது க்ரூப் 4 நாடுகள். இந்த கூட்டத்தில், ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சிலை சீர்திருத்துவது சம்பந்தமாக விவாதிக்கப்படும்.

அதன் பின்னர் பிரதமர் கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோஸ் நகருக்கு வருகை தந்து, டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு வருகை தந்து, அங்கு ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக், மைக்ரோசாப்டின் சத்யா நாடெல்ல, கூகிளின் சுந்தர் பிச்சை மற்றும் அடோப் நிறுவனத்தின் சாந்தனு நாராயண் ஆகியோரை சந்திக்கிறார். அங்கு, டிஜிட்டல் இந்தியா மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப இரவு விருந்தில் கலந்து கொள்கிறார் பிரதமர்

****