Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நிர்வாகத்தில் கற்றல், குழுப்பணி, கடின உழைப்பு ஆகியவற்றை எடுத்துரைக்கும் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


குஜராத் முதலமைச்சராகப் பணியாற்றிய தொடக்க காலங்களில் கற்றல், குழுப்பணி, கடின உழைப்பு ஆகியவற்றில் பிரதமர் எவ்வாறு கவனம் செலுத்தினார் என்பதை எடுத்துரைக்கும் திரு ஹஷ்முக் அதியாவின் கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இந்த அணுகுமுறை எப்படி நிர்வாகத்திற்கு புதிய தொலைநோக்குப் பார்வையை அளித்தது என்றும் திரு மோடியின் 25 ஆண்டுகால பொது வாழ்க்கையில் காணப்பட்ட மாற்றத்தக்க தலைமைத்துவத்திற்கான அடித்தளத்தை அமைத்தது என்றும் திரு அதியா சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“குஜராத் முதலமைச்சராகப் பணியாற்றிய தொடக்க காலங்களில் கற்றல், குழுப்பணி, கடின உழைப்பு ஆகியவற்றில் பிரதமர் திரு நரேந்திர மோடி கவனம் செலுத்தினார். இந்த அணுகுமுறை எப்படி நிர்வாகத்திற்கு புதிய தொலைநோக்குப் பார்வையை அளித்தது என்றும் அவரது 25 ஆண்டுகால பொது வாழ்க்கையில் காணப்பட்ட தலைமைத்துவத்தை வடிவமைத்தது என்றும் திரு ஹஷ்முக் அதியா நினைவு கூர்கிறார்.

https://www.hindustantimes.com/india-news/a-glimpse-at-early-years-of-narendra-modi-as-the-chief-minister-of-gujarat-101791334808987.html

***

(Release ID: 2319996)

TV/IR/SM/SH