Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நேபாளத்தில் இடைக்கால அரசின் பிரதமராகப் பதவியேற்றுள்ள திருமதி சுசிலா கார்க்கிக்கு பிரதமர் வாழ்த்து


நேபாள நாட்டின் இடைக்கால அரசின் பிரதமராகப் பதவியேற்றுள்ள  திருமதி சுசிலா கார்க்கிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்நேபாள மக்களின் அமைதி, வளம் மற்றும் முன்னேற்றத்துக்கு இந்தியா அர்ப்பணிப்புடன் உள்ளது என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

நேபாளத்தின்  இடைக்கால அரசின் பிரதமராகப் பதவியேற்றுள்ள  திருமதி சுசிலா கார்க்கிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேபாள நாட்டு மக்களின் அமைதி, வளம் மற்றும் முன்னேற்றத்துக்கு இந்தியா  உறுதிபூண்டுள்ளது.”

***

(Release ID: 2166180)

AD/PKV/RJ