Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நேபாள பிரதமருடன் பிரதமர் மோடி உரையாடல் – பீகார் இளைஞர் கொல்லப்பட்டதற்கு கண்டனம்


நேபாள காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பீகார் இளைஞர் துரதிஷ்டவசமாக உயிர் இழந்ததிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அதிர்ச்சியையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி நேபாள பிரதமர் திரு. கே.பி. ஒளியுடன் உரையாடினார். இந்த சம்பவம் குறித்த தனது கவலையை தெரிவித்த பிரதமர் இது குறித்து மற்ற தகவல்களை தருமாறு கேட்டுக்கொண்டார்.

இந்தியா தரப்பிலிருந்து தரப்படும் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் எந்த தடையும் இன்றி வழங்கப்படும் என்று பிரதமர் உறுதி அளித்தார். இந்த நெருக்கடிக்கு விரைவில் பயனுள்ள தீர்வினை கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை நேபாள தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

•••••