Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நேபாள பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு


 

பிரதமர் திரு நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் (30.05.2019) நேபாள பிரதமர் மாண்புமிகு திரு கே பி ஷர்மா ஒலி கலந்து கொண்டார்.

இன்று (31.05.2019) நடைபெற்ற இருதரப்பு சந்திப்பின் போது, அண்மையில்  நடந்து முடிந்த பொதுத் தேர்தல்களில் மகத்தான வெற்றி பெற்றதற்காக பிரதமருக்கு நேபாள பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார்.

இந்தியா – நேபாளம் இடையே பன்முனை பங்களிப்புக்காகவும், பாரம்பரியமான நெருக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்காகவும்  நேபாளத்துடன் பணியாற்ற இந்தியாவின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தியதோடு நல்வாழ்த்துக்களுக்காக பிரதமர் திரு மோடி நன்றி கூறினார். 

இருதரப்பு திட்டங்கள் மற்றும் முயற்சிகளின் அமலாக்கத்தில் சாதனைப் படைத்திருப்பதற்காகவும், முன்னேற்றம் கண்டிருப்பதற்காகவும், இருதலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். 

****

விகீ/எஸ்எம்பி/வேணி