Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பணியாளர் மேலாண்மை மற்றும் பொதுநிர்வாகத் துறைகளில் இந்தியா-சிங்கப்பூர் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பணியாளர் மேலாண்மை மற்றும் பொதுநிர்வாகத் துறைகளில், இந்தியா-சிங்கப்பூர் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

  

சிறப்பம்சங்கள்:

     பணியாளர், பணியிடங்கள் மற்றும் வேலை, பொதுசேவைச் வழங்குதல், மனிதவள மேலாண்மை, பொதுத்துறை சீர்திருத்தம், தலைமைப் பண்பு / செயல்திறன் மேம்பாடு மற்றும் மின்ஆளுகை / டிஜிட்டல் நிர்வாகம் போன்றவற்றில் தற்போது பின்பற்றப்படும் நடைமுறைகளை மேம்படுத்த இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.

பலன்கள்:

     பொதுநிர்வாகம் மற்றும் ஆளுமை சீர்திருத்தங்களில் இந்தியாவும், சிங்கப்பூரும் ஒத்துழைப்பதற்கான கட்டமைப்புகளை இந்த ஒப்பந்தம் வழங்கும்.

     பொது நிர்வாகம், நல்ஆளுகை மற்றும் பொதுசேவைச் சீர்திருத்தம் போன்றவற்றில் உயர்சிறப்பை அடையவும், அதன்மூலம் அரசின் பொறுப்புணர்வை மேம்படுத்தவும் இது வகைசெய்கிறது.

     புதுமையான மற்றும் சிறப்பான நடைமுறைகளை அறிமுகப்படுத்தி, பொதுநிர்வாகத்தில் உயர்நிலையை எட்டவும், ஆன்லைன் மூலம் அரசு சேவைகளை வழங்கவும் இந்த ஒப்பந்தம் உதவிகரமாக இருக்கும்.

 

————-