Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா நினைவு நாளை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்


பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா நினைவு நாளை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மையமாகக் கொண்டு நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கான வழியைக் காட்டினார் என்றும், இது வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க உத்வேகம் அளித்துள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

“பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் நினைவு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள நமது குடும்ப உறுப்பினர்கள் சார்பாக அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மையமாக வைத்து நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான வழியை அவர் காட்டினார். இது வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் உத்வேகம் அளித்துள்ளது.”

—-

 

ANU/PKV/PLM/DL