Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பல்வேறு பண்டிகைகளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


பல்வேறு பண்டிகைகளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“வரும் நாட்களில் இந்தியாவின் பல்வேறு பகுதியில் உள்ள மக்கள் பல்வேறு பண்டிகைகளை கொண்டாடவுள்ளனர். வேற்றுமையில் ஒற்றுமையை கொண்டாடுவதோடு, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தையும் கொண்டாடுவீர். இந்த பண்டிகைகளை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஒவ்வொருவரின் வாழ்விலும், மகிழ்ச்சியும், வளமும் பொங்கட்டும்”.

உங்கள் அனைவருக்கும் பைசாகி வாழத்துக்கள்! “பைசாகி தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். இந்த நன்னாள் அனைவரது வாழ்விலும், வெற்றியை தேடி தருவதுடன், நல்ல உடல் ஆரோக்கியத்தையும் வழங்கட்டும். நாட்டிற்கு உணவு அளிக்கும் விவசாயிகளின் கடின உழைப்புக்கு மரியாதை செலுத்துவோம்”

வலிமையான ஒடியா சமூகத்தினருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! “புத்தாண்டு பிறப்போடு, புதிய எதிர்பார்ப்புகளும், புதிய நம்பிக்கைகளும் பிறக்கட்டும்! இந்த மகா விஷுப சங்கராந்தி தினத்தில் உங்களது அனைவரது விருப்பங்களும் நிறைவேறட்டும். ஒவ்வொருவரின் நலன் மற்றும் மகிழ்ச்சிக்காக பிரார்த்திக்கிறேன்”.

அன்பார்ந்த தமிழக சகோதரிகளே, சகோதரர்களே, வருங்காலம் மிகச்சிறப்பானதாக அமைய பிரார்த்திக்கிறேன்.

“எனது அருமை சகோதரிகளுக்கும், சகோதரர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். வரும் ஆண்டு முழுவதும் உங்களது எண்ணங்கள் நிறைவேறும் ஆண்டாக அமையட்டும். நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும், வளமுடனும் இருக்க வாழ்த்துகிறேன்” என்று பிரதமர் தமது டிவிட்டர் பதிவுகளில் தெரிவித்துள்ளார்.