Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பழமையாகிப் போன மற்றும் தேவையற்ற சட்டங்களை திரும்பப் பெறுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


105 சட்டங்களைத் திரும்ப பெறுவதற்கான திரும்பப் பெறும் மற்றம் திருத்த மசோதா 2017 –ஐ த் தாக்கல் செய்ய பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

பின்னணி:

பிரதமர் அலுவலகம், இந்திய சட்ட ஆணையம், சட்டம் இயற்றும் துறை ஆகியவை அமைத்த இரண்டு உறுப்பினர் குழு பழமையாகிப்போன தேவையற்ற திரும்பப்பெறுவதற்கு உரிய 1824 சட்டங்களை இனம் கண்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் ஆகியவற்றுடன் ஆலோசனை செய்து கவனமாக பரிசீலித்தபின் 2014 மே மாதத்துக்கும் 2016 ஆகஸ்டு மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட 1175 மத்திய சட்டங்களை திரும்பப் பெறுவதற்கென நான்கு சட்டங்கள் இயற்றப்பட்டன.

i) 35 சட்டங்களைத் திரும்ப பெறுவதற்கான, திரும்பப் பெறுதல் மற்றும் திருத்தச் சட்டம் 2015 (2015 – ல் 17) 90 சட்டங்களைத் திரும்ப பெறுவதற்கான, திரும்பப் பெறுதல் மற்றும் திருத்தச் சட்டம் 2015 (2015 –ல் 19)

ii) 756 சட்டங்களைத் திரும்ப பெறுவதற்கான, ஒதுக்கீட்டுச் சட்டம் (திரும்பப் பெறுதல்) சட்டம் 2016 (2016 – ல் 22)

iii) ஒதுக்கீட்டு (ரயில்வே) சட்டம் உள்ளிட்ட ஒதுக்கீட்டுச் சட்டங்கள்

iv) 294 சட்டங்களைத் திரும்ப பெறுவதற்கான, ஒதுக்கீட்டு மற்றும் திருத்தச் சட்டம் 2016 (2016 – ல் 23)

முன்னே குறிப்பிட்ட 1824 சட்டங்களில் 227 சட்டங்கள் (குடியரசுத் தலைவர் ஆட்சியில் இருந்த மாநிலங்களுக்காக நாடாளுமன்றம் இயற்றிய ஒதுக்கீட்டுச் சட்டங்கள் உள்ளிட்டவை) திரும்ப்ப் பெறுவதற்கு குறிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட மாநில அரசுகள் அவற்றைத் திரும்ப பெறுவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

எஞ்சியுள்ள 422 மத்திய சட்டங்கள் அனைத்து அமைச்சகங்கள் / துறைகளுக்கு அவை சம்மந்தப்பட்ட சட்டங்கள் திரும்ப்ப் பெறுவதற்குரிய கருத்துக்கள் தெரிவிப்பதற்காக சுற்றுக்கு விடப்பட்டது. நாளது தேதிவரை சட்டம் இயற்றம் துறை உள்ளிட்ட 73 அமைச்சகங்கள் / துறைகள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளன. இவற்றின்படி 105 சட்டங்களை திரும்பப் பெற அவை ஒப்புதல் அளித்துள்ளன. 139 சட்டங்களை திரும்பப் பெற இவை ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த கருத்துகள் / ஒப்புதல்கள் அடிப்படையில் 105 சட்டங்களை திரும்பப் பெறுவதற்கு அடையாளம் காணப்பட்டுள்ளன.

*****