Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பஹ்ரைன் அரசருடன் பிரதமர் தொலைபேசி வாயிலாகப் பேச்சு


பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பஹ்ரைன் அரசர் ஹமத் பின் இசா அல் கலீஃபாவுடன் தொலைபேசியில் உரையாடினார்.

அப்போது, பஹ்ரைன் மீதான சமீபத்திய தாக்குதல்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்தார். இந்தக் கடினமான நேரத்தில் பஹ்ரைன் மக்களுக்கு இந்தியாவின் உறுதியான ஆதரவை அவர் வெளிப்படுத்தினார்.

பஹ்ரைனில் வசிக்கும் இந்திய மக்களுக்கு அளித்த ஆதரவு மற்றும் உதவிக்காக அந்நாட்டு அரசருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

இந்த உரையாடல் தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் குறிப்பிட்டதாவது:

“பஹ்ரைன் அரசர் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீஃபாவுடன் ஒரு ஆக்கப்பூர்வமான தொலைபேசி உரையாடலை மேற்கொண்டேன். பஹ்ரைன் மீதான தாக்குதல்களை இந்தியா கண்டிப்பதுடன், இந்தத் துயரமான தருணத்தில் அந்நாட்டு மக்களுக்கு இந்தியா முழு ஆதரவையும் வழங்குகிறது. பஹ்ரைனில் உள்ள இந்திய மக்களுக்கு அளித்த உறுதியான ஆதரவிற்காக  நான் அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.”     

***

(Release ID: 2234657)

TV/BR/RK