Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பஹ்ரைன் நாட்டு வெளியுறவு அமைச்சருடன் பிரதமர் சந்திப்பு


s2015022362635 [ PM India 0KB ]

பஹ்ரைன் நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷேக் காலித் பின் முகமது அல் கலீஃபா-ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடியை வரவேற்றார். இந்தியா மற்றும் பஹ்ரைன் இடையேயான சந்திப்பிற்காக அவர் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். இந்த சந்திப்பிற்கு இந்திய வெளியுறவு அமைச்சரும் இணைந்து தலைமை வகிப்பார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பஹ்ரைன் நாட்டு மன்னர் இந்தியாவிற்கு வருகை புரிந்ததை பிரதமர் நினைவு கூர்ந்தார். அவரது வருகை இந்த இருதரப்பு உறவிற்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளதாக தெரிவித்தார். பஹ்ரைநில் வாழும் 4 லட்சம் இந்தியர்களுக்கு பஹ்ரைன் அரசு அளித்துவரும் தொடர் உதவியையும் ஒத்துழைப்பையும் பாராட்டினார்.

பிரதமர் மோடி பஹ்ரைனுக்கு வருகை புரிவதற்கான பஹ்ரைன் பிரதமரின் அழைப்பு கடிதத்தை வெளியுறவு அமைச்சர் பிரதமரிடம் அளித்தார். இந்தியா மீதான பஹ்ரைன் மக்களின் ஆழந்த நட்புணர்ச்சியை அவர் நினைவு கூர்ந்தார். பாதுகாப்புத்துறை, பாதுகாப்பு, தீவிரவாதத்தை எதிர்த்தல், வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த பஹ்ரைன் அரசு உறுதியாக இருப்பதாக பஹ்ரைன் நாட்டின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.