Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாகிஸ்தானிலிருந்து திரும்பிவந்த கீதா பிரதமரை சந்தித்தார்

பல ஆண்டுகளுக்கு முன்னர் வழிதவறி இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிற்கு சென்ற மாற்றுத் திறனாளியான கீதா, இன்று இந்தியாவிற்கு திரும்பியிருந்தார். பின்னர் அவர் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.

தாய்நாட்டுக்கு திரும்பும் உங்களுக்கு நல்வரவு என்று கூறிய பிரதமரை கீதா அணைத்துக் கொண்டார். அவருடைய குடும்பத்தினரை தேடுவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

இந்தியாவில் அவர் நன்கு பாதுகாக்கப்படுவார் என்றும் பிரதமர் கூறினார். இந்தியாவில் உள்ள அனைவரும் உங்களை பாதுகாப்பார்கள் என்று அப்போது பிரதமர் தெரிவித்தார்.

கராச்சியில் உள்ள எதி அறக்கட்டளை அமைப்பின் திருமதி பில்குவிஸ் பானோ எதி என்பவர் பல ஆண்டுகளாக கீதாவை அன்புடன் பாதுகாத்து வந்ததற்காக பிரதமர் அவரை பாராட்டினார்.

எதி அறக்கட்டளை அமைப்பை பாராட்டும் வகையில் ஒரு கோடி ரூபாய் அளிக்கப்படும் பிரதமர் அப்போது அறிவித்தார். கீதாவை பல ஆண்டுகள் பாதுகாத்து வந்ததற்காக மட்டுமல்லாமல், அந்த அமைப்பு மேற்கொள்ளும் பல்வேறு பணிகளுக்காகவும் இந்த நிதி வழங்கப்படுகிறது.

பிரதம திருமதி பில்குவிஸ் பானோ எதி குஜராத் மாநிலம் ஜுனாகத் மாவட்டத்தில் பந்த்வா என்ற இடத்தில் பிறந்தவர் என்பதை அறிந்த பிரதமர், அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஜுனாகத்துக்கு பயணம் மேற்கொள்ளும்படி அழைப்பு விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜும் பில்குவிஸ் பானோ எதி அமைப்பு கீதாவை பல ஆண்டுகாலம் அன்புடன் கவனித்துக் கொண்டதற்காக பாராட்டினார்.