Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாட்னா உயர் நீதிமன்ற நூற்றாண்டு கொண்டாட்டத்தின் நிறைவு விழாவில் பிரதமர் உரை

பாட்னா உயர் நீதிமன்ற நூற்றாண்டு கொண்டாட்டத்தின் நிறைவு விழாவில் பிரதமர் உரை


பாட்னா உயர் நீதிமன்ற நூற்றாண்டு கொண்டாட்டத்தின் நிறைவு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

பாட்னா உயர் நீதிமன்றம் கடந்த நூறு ஆண்டில் நிகழ்த்திய சாதனைகளை பிரதமர் விவரித்தார். இந்த நூறு ஆண்டுகளில் ஏற்படுத்திய சாதனைகளில் சிறந்தவற்றை முன்னெடுத்துச் செல்லவெண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். இந்த தருணத்தில், புதிய உறுதி மொழிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வரும் காலங்களில் புதிய சாதனைகளை படைக்க அனைத்து பங்குதாரர்களும் உழைக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

தொழில்நுட்பத்தின் ஆற்றல் குறித்து பேசிய பிரதமர் நீதிமன்றங்கள் அனைத்தும் தொழில்நுட்பங்களை நன்கு பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தொழில்நுட்பத்தின் பயன்பாடு, வழக்கு விவாதங்கள் மற்றும் தீர்ப்புகளின் தரத்தை மேம்படுத்தும் என்றும் பிரதமர் கூறினார்.

***